சீதக்காதி தயாரிப்பு நிறுவனம்... ஃபேஷன் ஸ்டூடியோசுடன் இரண்டு படங்களில் ஒப்பந்தமான நயன்
சென்னை : நடிகை நயன்தாராவின் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
கொரோனா லாக்டவுன் காரணமாக தற்போது தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் பொழுதை போக்கி வருகிறார் நயன்.
இந்நிலையில் அடுத்ததாக ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

பிசியான நடிகை
கோலிவுட்டில் நடிகை நயன்தாரா தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவரது நெற்றிக்கண் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் விரைவில் மீண்டும் சூட்டிங் துவங்கவுள்ளது.

தேர்ந்தெடுத்த படங்கள்
நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் அவர் கமிட்டாகி வருகிறார். மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரப்படும் படங்களை தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருகிறார். தொடர்ந்து அத்தகைய கதைகளுக்கு முக்கியத்துவம் தந்து படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

2 படங்களில் ஒப்பந்தம்
தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள நெற்றிக்கண் படத்திலும் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி கேரக்டரில் முதல் முறையாக நடித்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இரண்டு ப்ராஜக்ட்டில் அவர் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

வித்தியாச கதைகளுக்கு முக்கியத்துவம
சீதக்காதி, அந்தகாரம், பென்குயின் உள்ளிட்ட சிறப்பான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்துள்ள ஃபேஷன் ஸ்டூடியோஸ் வித்தியாசமான கதைகளுக்கு முக்கியத்துவம் தந்து படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் நடித்துவரும் நயன்தாரா அந்த நிறுவனத்துடன் கைகோர்த்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











