வந்துட்டேன்னு சொல்லு.. குழந்தைகளுடன் ஸ்டைலா கெத்தா என்ட்ரி கொடுத்த நயன்தாரா!
சென்னை:இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கிய நயன்தாரா தனது குழந்தைகளுடன் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா ரஜினி, விஜய், தனுஷ், அஜித் என பல டாப் நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன்தாரா, திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் 6 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்.
காதல் திருமணம்: இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மகாபலிபுத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வாடகைத்தாய் மூலம் திருமணமான நான்கு மாதத்திற்குள்ளே இரட்டைக் குழந்தைக்கு பெற்றோர் ஆனதாக அறிவித்தனர்.
குழந்தைகளின் பெயர்: இதையடுத்து, குழந்தைகளுக்கு வித்தியாசமான முறையில் உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்பது தான் குழந்தைகளின் பெயர்களாக அறிவித்துள்ளனர். இதில் 'N' என்பது நயன்தாராவையும், சிவன் விக்னேஷ் சிவனையும் குறிக்கிறது.

ஜவான் படத்தில்: தற்போது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். அட்லி இயக்கத்தில் பிரமாண்ட பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள ஜவான் படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ஷாருக்கன், விஜய் சேதுபதி,அட்லீ, அனிருத் என பலர் கலந்து கொண்ட நிலையில் நயன்தாரா மட்டும் கலந்து கொள்ளாதது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
வந்துட்டேன்னு சொல்லு: இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத நயன்தாரா, இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். மேலும், முதல் பதிவாக தனது இரட்டை குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஒரு அறையில் இருந்து ஸ்டைலா கெத்தா கூலிங் கிளாஸ் போட்டுகொண்டு வெளியே வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேக்ரவுண்டில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற அலப்பறை கெளப்புறோம் பாடல் ஓடுகிறது. இதற்கு கேப்ஷனாக வந்துட்டேன்னு சொல்லு என்று பதிவிட்டுள்ளார். நயன்தாரா இன்ஸ்டாவில் இணைந்ததற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











