பிரபல இயக்குநருடன் மூன்றாவது முறையாக இணையும் நயன்தாரா.. அவரே சொல்லிட்டார்!

சென்னை: பிரபல இயக்குநரின் படத்தில் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் நடிகை நயன்தாரா.

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளார்.

தமிழ், மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் உறவில் உள்ள நயன்தாரா விரைவில் அவரை திருமணம் செய்ய உள்ளார்.

நெற்றிக்கண் கலவை விமர்சனம்

நெற்றிக்கண் கலவை விமர்சனம்

அவரது நடிப்பில் சமீபத்தில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நயன்தாராவின் அடுத்த படம்

நயன்தாராவின் அடுத்த படம்

இந்நிலையில் நடிகை நயன்தாரா நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'.

தெலுங்கில் ரீமேக் ஆகும் லூசிபர் படம்

தெலுங்கில் ரீமேக் ஆகும் லூசிபர் படம்

இந்த படத்தில் நடிகர் மோகன்லால் அரசியல்வாதியாகவும், நிழல் உலக தாதாவாகவும் நடித்து பட்டையை கிளப்பியிருந்தார். தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தில் சிரஞ்சீவி லீடிங் ரோலில் நடிக்கிறார்.

நயன்தாரா லீடிங் ரோல்

நயன்தாரா லீடிங் ரோல்

இந்தப் படத்தை பிரபல இயக்குனரான மோகன் ராஜா இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோகன் ராஜாவுடன் 3வது முறை

மோகன் ராஜாவுடன் 3வது முறை

சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். இதன்மூலம் நடிகை நயன்தாரா, இயக்குனர் மோகன் ராஜாவுடன் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்ற உள்ளார். ஏற்கனவே மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற படங்களில் நடிதுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X