Nayanthara: நயன்தாராவின் அடுத்தப்படத்தை இயக்கும் யூடியூபர்.. என்ன கதை தெரியுமா?

சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது அவரது கைவசம் 4 படங்கள் உள்ளன.

ஷாருக்கான் -அட்லீ காம்பினேஷனில் உருவாகிவரும் ஜவான் படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டிலும் அவரது என்ட்ரி நிகழ உள்ளது.

Actress Nayanthara joins with Youtuber Dude vickys debut movie

இந்தப் படத்தின் ட்ரெயிலர் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது.

நயன்தாராவின் அடுத்தப்படத்தை இயக்கும் யூடியூபர்: மலையாளப் படங்களில் நடிக்கத் துவங்கி அதன்மூலம் தமிழில் ஐயா படத்தின் வாய்ப்பை பெற்றவர் நடிகை நயன்தாரா. இந்தப் படம் கடந்த 2005ம் ஆண்டில் வெளியான நிலையில், முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்திருந்தார் நயன்தாரா, அடுத்தடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நட்சத்திரங்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து 20 ஆண்டுகளாக திரையுலகில் தனது சாம்ராஜ்யத்தை தக்க வைத்து வருகிறார்.

Actress Nayanthara joins with Youtuber Dude vickys debut movie

தற்போது பாலிவுட்டிலும் இவரது என்ட்ரி அமையவுள்ளது. பாலிவுட் பாட்ஷா என்று கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கானுடன் ஜவான் படத்தல் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்தப் படம் வரும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது. படத்தை இயக்குநர் அட்லீ இயக்கிவரும் சூழலில், படத்தின் ட்ரெயிலர் விரைவில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டிலும் தனக்கான இடத்தை நயன்தாரா உறுதி செய்வார் என்று நம்பலாம்.

நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளன. ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்துள்ள இறைவன் படமும் ரிலீசாகவுள்ளது. தற்போது அடுத்தடுத்த 4 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா. தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடந்த ஆண்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்ட நயன்தாரா, வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார்.

Actress Nayanthara joins with Youtuber Dude vickys debut movie

இந்நிலையில் தற்போது நயன்தாரா பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை பிரபல யூடியூபர் ட்யூட் விக்கி இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இந்தப் படம் இயக்கப்பட உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பூஜை வரும் 14ம் தேதி நடத்தப்பட உள்ளதாகவும் படத்தின் சூட்டிங்கும் விரைவில் துவங்கவுள்ளதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக மாயா, அறம், கோலமாவு கோகிலா போன்ற பெண்களை மையமாக கொண்ட படங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. அந்த வகையில் இந்தப் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் லஷ்மன்குமாரும் உறுதி செய்துள்ளார். படத்தின் இயக்குநரையும் உறுதி செய்துள்ள அவர், தற்போது இந்தப் படம் குறித்து பேசிய அவர் படம் கண்டிப்பாக அனைவரையும் கவரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X