Nayanthara: இயக்குநர்களுக்கு குடைச்சல் கொடுக்கிறாரா நயன்தாரா.. வெளியான தகவல்!

சென்னை: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

மலையாளத்தில் கடந்த 2003ம் ஆண்டில் மனசினகாரே என்ற படம்மூலம் அறிமுகமான நயன்தாராவிற்கு தமிழில் நடித்த ஐயா படம் சிறப்பாக கைக்கொடுத்தது.

Actress Nayanthara makes conditions in timing to work in movies it seems

இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் நயன்தாரா. சமீபத்தில் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்திருந்தார்.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா கடந்த 2003ம் ஆண்டில் மனசினகாரே என்ற மலையாள படம்மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்திருந்தார். முன்னதாக ஆங்கரிங், மாடலிங் என பிசியாக இருந்த இவருக்கு தமிழில் வெளியான ஐயா படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. தன்னுடைய அறிமுகப்படத்திலேயே ஏராளமான ரசிகர்களின் பேவரைட்டாக அமைந்த நயன்தாராவிற்கு தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் படங்கள் அமைந்தன.

20 ஆண்டு பயணம்: தொடர்ந்து 20 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் ஏராளமான ஹிட்களை கொடுத்து தன்னை முன்னணி நடிகையாக நிலைநிறுத்தி வரும் நயன்தாரா தற்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுடன் நயன்தாரா இணைந்து நடித்திருந்த ஜவான் படம் சமீபத்தில் வெளியாகி 1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. படத்தை அட்லீ இயக்கியிருந்தார்.

குழந்தைகளுடனான பதிவுகள்: இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு நயன்தாரா ஏற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்ட நயன்தாரா, வாடகைத்தாய் முறையில் இரு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். இவர் தன்னுடைய குழந்தைகளுடன் அதிகமான நேரத்தை செலவழிக்க விருப்பம் தெரிவித்து வருகிறார். குழந்தைகளுடன் இவர் இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

குடைச்சல் கொடுக்கிறாரா நயன்தாரா: தமிழில் இவருக்கு சில படங்களே உள்ள நிலையில், ஜெய்யுடன் நடித்துள்ள அன்னபூரணி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கரின் உதவி இயக்குநர் நிலேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த்ப் படம் டிசம்பர் 1ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னபூரணி உள்ளிட்ட சில படங்களே நயன்தாரா கைவசம் உள்ள நிலையில், சூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர்களுக்கு இவர் அதிகமான குடைச்சல் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலை 11 மணிக்கு வந்தால் 5 மணிவரை மட்டுமே தான் நடிப்பேன் என்று கூறுவதாகவும் முன்னதாகவே வீட்டிற்கு செல்லும் பரபரப்புடன் இவர் காணப்படுவதாகவும் தற்போது கூறப்பட்டுள்ளது.

சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நயன்தாரா: இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ள நயன்தாராவின் தவிப்பை புரிந்துக் கொள்ள முடிந்தாலும் நடிப்பை தொழிலாக கொண்டு பல கோடிகளை சம்பளமாக பெறும் நயன்தாரா, அதற்கேற்ப படக்குழுவினருக்கு ஃபேவராக, அதிகமான காட்சிகளை படமாக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றே டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள். இதை விட்டுவிட்டு குறிப்பிட்ட நேரம்தான் நடிப்பேன் என்று கண்டிஷன் போட்டு நெருக்கடி கொடுப்பது தற்போது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X