For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதலின்னா இப்படி இருக்கனும்.. காதலனை தயாரிப்பாளராக்கி அழகுபார்க்கும் நம்பர் நடிகை!

    |
    Nayanthara movie with Vignesh Shivan

    சென்னை: நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக்கியுள்ள தகவல் கோடம்பாக்கம் ஏரியாவில் சூட்டை கிளப்பியுள்ளது.

    நடிகை நயன்தாரா தமிழில் 2005ஆம் ஆண்டு வெளியான ஐய்யா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் பிஸியாக உள்ளார் நயன்தாரா.

    கடந்த 14 ஆண்டுகளாக தமிழில் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாரா, முதலில் நடிகர் சிம்புவை காதலித்தார். பின்னர் அவருடனான காதல் முறிந்தது. அதோடு அவரால் சில கோடி ரூபாய்களை இழந்ததாகவும் கூறப்பட்டது.

    பல கோடி இழப்பு

    பல கோடி இழப்பு

    இதைத்தொடர்ந்து நடிகர் பிரபு தேவாவை காதலித்தார் நயன்தாரா. அவரிடமும் பல கோடி ரூபாய் பணத்தை கொடுத்து ஏமாந்துபோனார் நயன்தாரா என்று கூறப்பட்டது.

    வாரியிறைத்த நயன்

    வாரியிறைத்த நயன்

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா. தற்போது விக்னேஷ் சிவனுக்காக பல கோடிகளை வாரியிறைத்திருக்கிறார் நயன்தாரா.

    கால்ஷீட்

    கால்ஷீட்

    அதாவது, பல கோடிகளை செலவு செய்து விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக்கியுள்ளார் நயன்தாரா. அதுமட்டுமின்றி விக்னேஷ் சிவன் தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்கவும் கால் ஷீட் கொடுத்திருக்கிறாராம் நயன்.

    நெற்றிக்கண்

    நெற்றிக்கண்

    இந்தப்படத்திற்கு நெற்றிக்கண் என பெயரிடப்பட்டுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் என்கறி பெயரில் தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது.

    அழகு பார்க்கும் நயன்

    அழகு பார்க்கும் நயன்

    நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் ஆகிவிட்டது, விரைவில் திருமணம் என்று நாள்தோறும் ஒரு தகவல் பரவி வரும் நிலையில் நடிகை நயன்தாரா, தனது கணவரை தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்த்துள்ளார்.

    English summary
    Actress Nayanthara makes Vignesh Sivan as cinema prodcer. Nayanthara also going to act in Vignesh Sivan Productions.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X