விக்கியுடன் திருமணம் எப்போது? நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை: நடிகை நயன்தாரா தனது திருமணம் குறித்து அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வருகிறார். ரஜினி, அஜித், விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, சிவ கார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

முன்பெல்லாம் எந்த மாதிரியான கதை என்றாலும் கதாபாத்திரம் என்றாலும் உடனடியாக நடிக்க ஒப்புக் கொள்ளும் நயன்தாரா, தற்போது தனக்கான முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார்.

ஒன்றாக வசிக்கின்றனர்

ஒன்றாக வசிக்கின்றனர்

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். இருவரும் திருமணத்திற்கு முன்பே ஒன்றாக குடும்பம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அது குறித்து இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

சாதித்த பிறகுதான்

சாதித்த பிறகுதான்

ஆனால் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலை மட்டும் இயக்குநர் விக்னேஷ் சிவன் மறுத்தார். இருவரும் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. சினிமாவில் சாதித்த பிறகுதான் திருமணம் என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கோவாவில் கொண்டாட்டம்

கோவாவில் கொண்டாட்டம்

இதனை தொடர்ந்து இருவரும் தனி விமானத்தில் சென்று நயன்தாராவின் சொந்த ஊரான கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். ஓணம் கொண்டாட்டங்களை முடித்த கையோடு கோவாவுக்கு பறந்தனர். அங்கு தனி வில்லாவில் ஓய்வை கழித்தனர் விக்கியும் நயனும்.

அமர்க்களப்படுத்திய நயன்

அமர்க்களப்படுத்திய நயன்

அப்போது விக்கியின் பிறந்த நாள் வர, பார்ட்டி, மியூஸிக், கேக் என விமரிசையாக ஏற்பாடு செய்து அதகளப்படுத்தினார் நயன்தாரா. அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நடிகை நயன்தாரா இந்த ஆண்டாவது விக்கியுடன் திருமண பந்தத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தேசிய விருதுக்கு பிறகு?

தேசிய விருதுக்கு பிறகு?

ஆனால் தனது திருமணம் குறித்து நடிகை நயன்தாரா புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தேசிய விருது பெற்ற பின்னர் தான் திருமணம் என முடிவு எடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

எட்டாக்கனியாக..

எட்டாக்கனியாக..

நயன்தாராவுக்கு முன்பே அறம் படத்துக்காக தேசிய விருது கிடைக்க வேண்டியது. ஆனால் சில பல காரணங்களால் கிடைக்காமல் போனது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வரும் நிலையிலும் பல்வேறு பாராட்டுகளும் விருதுகளும் குவிந்தாலும் தேசிய விருது மட்டும் இதுவரை எட்டாக்கனியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X