ஒருபக்கம் அம்மா.. மறுபக்கம் காதலர்.. கலக்கலாக ஓணம் கொண்டாடிய நயன்.. தெறிக்கவிட்ட ஃபேன்ஸ்!#Nayanthara
சென்னை: நடிகை நயன்தரா தனது காதலர் மற்றும் அம்மாவுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய போட்டோக்கள் வைரலாகி வரும் நிலையில் நயன்தாராவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
Recommended Video
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதடலித்து வருவதும் லிவிங் டுகேதரில் இருப்பதும் ஊர் அறிந்த கதைதான்.
இந்நிலையில் மலையாள மக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை கொண்டாடி நடிகை நயன்தாரா தனது சொந்த ஊரான கொச்சினுக்கு புறப்பட்டார்.

விக்கியுடன் தனி விமானத்தில்
லாக்டவுன் என்பதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் தனது காதலரான விக்னேஷ் சிவனுடன்தனி விமானம் மூலம் நயன்தாரா சொந்த ஊருக்கு சென்றார். அவர்கள் இருவரும் விமானத்தில் இருந்து இறங்கி நடந்து சென்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் காலை முதல் வைரலானது.

ரொமான்ட்டிக் லுக்
இந்நிலையில் நடிகை நயன்தாரா, தனது வருங்கால கணவரும் காதலருமான விக்னேஷ் சிவனுடன் கேரள பாரம்பரிய உடையில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய போட்டோக்கள் வெளியானது. சோஃபாவில் ரொம்பவே நெருக்கமாக அமர்ந்தப்படி ரொமான்ட்டிக் லுக்கில் இருவரும் போஸ் கொடுத்திருந்தனர்.

அம்மாவுடன் கொண்டாட்டம்
அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அதனை தொடர்ந்து தனது அம்மாவுடன் சேர்ந்து நயன்தாரா எடுத்த போட்டோக்களும் சமூக வலைதளங்களில் செம வைரலானது. அம்மாவுக்கு அருகில் அமர்ந்தப்படிய்ம, அம்மாவிடம் முத்தம் பெற்றப்படியும் அம்மா மற்றும் காதலருடன் சேர்ந்து இருந்த படியும் ஏராளமான போட்டோக்கள் வைரலானது.

காலங்களை கடந்திருவேன்
இதனை பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள் #Nayanthara என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட்டாக்கி வருகின்றனர். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கைகளை கோர்த்தப்படி இருக்கும் போட்டோவை பார்த்த இந்த ரசிகர் கை விரல பிடிச்சுக்கிட்டே காலங்களை கடந்திருவேன் என பதிவிட்டுள்ளார்.

இன்னும் அழகாக்குகிறது
மை லவ் நயன்தாரா இந்த வருட ஓணம் சேலை ரொம்ப அழகாக உள்ளது. அது உங்களை இன்னும் அழகாக்குகிறது என நயன்தாரா அவரது அம்மா மற்றும் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார் இந்த ரசிகர்.

ஷேர் செய்யப்படும் போட்டோக்கள்
நயன்தாரா அவரது அம்மாவுடன் இருக்கும் போட்டோக்கள் ரொம்ப அழகாக உள்ளது.. இதுதான் சிறந்தது என அம்மாவுடன் இருக்கும் போட்டோ, அம்மா முத்தம் கொடுக்கும் போட்டோ, அம்மா மற்றும் விக்கியுடன் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். மேலும் நயன்தாராவின் ரசிகர்கள் பலரும் அவரின் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











