எனக்கும் விக்கிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.. டிவி நிகழ்ச்சியில் பட்டென போட்டுடைத்த நயன்!

சென்னை: நடிகை நயன்தாரா தான் அணிந்திருக்கும் மோதிரம் குறித்தும் காதலர் விக்கி குறித்தும் பேசும் புரமோ வெளியாகியுள்ளது.

மலையாள நடிகையான நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக உயர்ந்தார் நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார்

லேடி சூப்பர் ஸ்டார்

லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த புதிதில் நடிகர் சிம்புவை காதலித்தார். கருத்து வேறுபாட்டால் சிம்புவை பிரிந்த நடிகை நயன்தாரா பின்னர் நடிகரும் இயக்குநருமான பிரபுதேவாவை காதலித்தார்,.

பிரபுதேவாவுடன் நயன் காதல்

பிரபுதேவாவுடன் நயன் காதல்

பிரபு தேவாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக நினைத்த நயன்தாரா, சினிமாவுக்கு என்ட் கார்டு போடும் முடிவுக்கு வந்தார். ஆனால் பிரபு தேவாவுடனான அந்தக் காதலும் முறிந்தது. இதனால் மீண்டும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் நயன்தாரா. இந்நிலையில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார்.

விக்கியுடன் காதல் - லிவிங் டுகெதர்

விக்கியுடன் காதல் - லிவிங் டுகெதர்

அப்போது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர். மேலும் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். அந்த போட்டோக்களையும் தங்களின் இணையதள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

கோவா டூர் - ஓணம் கொண்டாட்டம்

கோவா டூர் - ஓணம் கொண்டாட்டம்

கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டுக்குள் முடங்கியிருந்த நயனும் விக்கியும் ரிலாக்ஸேஷன் அறிவித்த பிறகு, கோவாவில் ஓய்வை கழித்தனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. தொடர்ந்து ஓணம் செலிபிரேஷனுக்கு தனி விமானத்தில் கேரளா சென்ற இருவரும் கோலாகலமாக ஓணம் கொண்டாடினர் அந்த போட்டோக்களும் இணையத்தில் வைரலானது.

தந்தையின் ஆசையை நிறைவேற்ற திருமணம்

தந்தையின் ஆசையை நிறைவேற்ற திருமணம்

தொடர்ந்து இருவரும் வெளியூர் செல்லும் போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி ட்ரென்ட்டாகி வருகிறது. சமீபத்தில் நயன்தாராவின் தந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அவரது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.

நயனின் கையை கோர்த்திருப்பது போல்

நயனின் கையை கோர்த்திருப்பது போல்

அதோடு சமீபத்தில் நயன்தாராவின் கையை விக்னேஷ் சிவன் கோர்த்திருப்பது போன்றும் இருவரும் ஒரே மாதிரியாக மோதிரம் அணிந்திருப்பது போன்றும் போட்டோ வெளியானது. அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா அல்லது திருமணமே முடிந்துவிட்டதா என கேள்வி எழுப்பி வந்தனர்.

விஜய் டிவியில் லேடி சூப்பர் ஸ்டார்

விஜய் டிவியில் லேடி சூப்பர் ஸ்டார்

இந்நிலையில் அந்த கேள்விகளுக்கெல்லாம் நயன்தாரா பதில் சொல்வது போன்ற புரமோ ஒன்று வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு லேடி சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா பங்கேற்றுள்ளார்.

மோதிரம் குறித்து கேட்கும் டிடி

மோதிரம் குறித்து கேட்கும் டிடி

இந்த நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்குகிறார். இதில் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுகிறார் நயன்தாரா. அப்போது தொகுப்பாளினியான டிடி நயன்தாராவின் மோதிர விரல் குறித்தும் அவர் அணிந்திருக்கும் மோதிரம் குறித்தும் கேள்வி எழுப்புகிறார்.

விக்கிக்கிட்ட பிடிக்காத விஷயம் இருக்கு

விக்கிக்கிட்ட பிடிக்காத விஷயம் இருக்கு

அதற்கு பதில் சொல்லும் நயன்தாரா அது நிச்சயதார்த்த மோதிரம் என்று கூறுகிறார். மேலும் காதலர் விக்கியிடம் பிடித்த விஷயம் எது என்று கேட்கிறார் டிடி. அதற்கு விக்கியிடம் எல்லாமே பிடிக்கும் என்று கூறும் நயன்தாரா, பிடிக்காத விஷயமும் இருக்கு அதையும் சொல்லவா என கேட்டு மிரளவிடுகிறார்.

லைக்ஸ்களை குவிக்கும் புரமோ

லைக்ஸ்களை குவிக்கும் புரமோ

இந்த புரமோ வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவின் போட்டோவை பகிர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்க்க காத்திருக்கிறோம் என கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த புரமோ லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X