Nayanthara: லாரன்ஸ் -லோகேஷ் படத்திலிருந்து விலகிய நயன்தாரா.. என்ன ஆச்சு?

சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் இறைவன் படம் வெளியானது.

முன்னதாக நடிகர் ஷாருக்கானுடன் நயன்தாரா நடித்திருந்த ஜவான் படம் வெளியாகி 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.

அடுத்ததாக மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 உள்ளிட்ட சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா. தயாரிப்பாளராகவும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

லாரன்ஸ் -லோகேஷ் படத்திலிருந்து விலகிய நயன்தாரா: நடிகை நயன்தாரா பல ஆண்டுகளை கடந்து தன்னுடைய படங்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகையாக வலம்வந்துக் கொண்டிருந்த நயன்தாரா சமீபத்தில் வெளியான ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார். ஜவான் படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நயன்தாரா. இந்தப் படம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.

Actress Nayanthara opted out of Raghava lawrence and Lokesh kanagaraj combination movie

மேலும் தமிழில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா இணைந்து நடித்திருந்த இறைவன் படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படம் சைக்கோ த்ரில்லராக வெளியானது. ராட்சசன், போர் தொழில் போன்ற படங்களின் வரிசையில் இந்தப் படமும் இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், படம் ரசிகர்களை கவர தவறியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா.

Actress Nayanthara opted out of Raghava lawrence and Lokesh kanagaraj combination movie

மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஒரு படம் என கமிட்டாகியிருந்தார். இதில் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவுள்ள படத்தை அவரது உதவி இயக்குநர் ரத்னகுமார் இயக்க கமிட்டாகியுள்ளார். ஹாரர் கதைக்களத்தில் உருவாகவிருந்த இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியிருந்தார். இந்தப் படத்தில் லாரன்சிற்கு நயன்தாரா ஜோடியில்லை என்றும் இருவருக்கும் படத்தில் சமமான கேரக்டர் என்றும் முன்னதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து நயன்தாரா விலகியுள்ளார். இதனால் இந்தப் படத்தின் கதையை மாற்றியமைக்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் சூட்டிங் அப்டேட் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திலிருந்து நடிகை நயன்தாரா தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மண்ணாங்கட்டி உள்ளிட்ட சில படங்களில் கமிட்டாகியுள்ள நயன்தாரா, அடுத்தடுத்த பிசினஸ்களையும் துவக்கி நடத்தி வருகிறார். மேலும் ரௌடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஜவான் படம் ஏற்படுத்தியுள்ள அதிரிபுதிரி வெற்றியால் நயன்தாராவிற்கு பாலிவுட்டிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய குழந்தைகள் உயிர், உலக் ஆகியோருடனும் அதிக நேரத்தை செலவழிக்க நயன்தாரா ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X