ஆரம்பமாகும் அண்ணாத்த ஷுட்டிங்.. அசத்தலாய் ஹைத்ராபாத்தில் லேண்டான நயன்.. திணறடிக்கும் போட்டோஸ்!

சென்னை: அண்ணாத்த படத்தின் ஷுட்டிங் தொடங்கவுள்ளதை முன்னிட்டு நடிகை நயன்தாரா தனிவிமானம் மூலம் ஹைத்ராபாத் சென்ற போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

Recommended Video

சென்னை: பிளைட்டில் கேக் வெட்டிய ரஜினிகாந்த்.. மாஸ் காட்டிய அண்ணாத்த… வைரல் வீடியோ..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்தப்படத்தில் முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் நடித்து வருகின்றனர்.

குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா, பிரகாஷஷ் ராஜ், ஜாக்கி ஷெராஃப், வேல ராமமூர்த்தி என பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றர்.

படப்பிடிப்பு தாமதமானது

படப்பிடிப்பு தாமதமானது

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே ஹைதராபாத்தில் தொடங்கி 40 சதவீதம் காட்சிகள் முடிக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கை தளர்த்தியதும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் படப்பிடிப்பு சில காரணங்களால் தாமதமானது.

முடிக்க திட்டம்

முடிக்க திட்டம்

தற்போது அரசியலுக்கு வருவதை ரஜினி உறுதிப்படுத்தியுள்ளார். விரைவில் கட்சி பெயரை அறிவிக்க இருப்பதால் அதற்கு முன்பாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

டிசம்பர் 15ஆம் தேதி

டிசம்பர் 15ஆம் தேதி

ரஜினிகாந்தும் ஒரு மாதத்தில் தனது காட்சிகள் அனைத்தையும் படமாக்கி விடுமாறு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது இயக்குனர் சிவா நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார்.

25 நாட்களில்..

25 நாட்களில்..

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க தனி விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் நேற்று ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளார். 25 நாட்களில் தன் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பை முடித்து கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

ஜீன்ஸ் பேண்ட் ஜீன்ஸ் ஷர்ட்

ஜீன்ஸ் பேண்ட் ஜீன்ஸ் ஷர்ட்

இந்நிலையில் அண்ணாத்த படத்தில் நடிக்கும் நடிகை நயன்தாராவும் தனி விமானம் மூலம் ஹைத்ராபாத் சென்றுள்ளார். ஜீன்ஸ் பேண்ட் ஜீன்ஸ் ஷர்ட், ஹை ஹீல்ஸ், ஃபிரி ஹேர் என அசத்தலாய் இறங்கினார்.

மீண்டும் வைரலாகும் போட்டோஸ்

மீண்டும் வைரலாகும் போட்டோஸ்

நயன்தாரா ஏற்கனவே தன விமானம் மூலம் கொச்சின் சென்றது, கோவா சென்று திரும்பியது போன்ற போட்டோக்கள் வைரலானது. இந்நிலையில் தற்போது அண்ணாத்த படப்பிடிப்புக்காக அவர் சென்ற போட்டோக்களும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X