தகாத உறவை சித்தரிக்கும் கேரக்டரில் நானா.. முடியவே முடியாது.. உதறித்தள்ளிய நயன்?
சென்னை: தகாத உறவை சித்தரிக்கும் கேரக்டரில் நடிக்க முடியாது என நடிகை நயன்தாரா உதறித்தள்ளியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியில் வெளியான படம் அந்தாதுன். இதில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. சிறந்தே இந்திப் படத்திற்கான விருது, சிறந்த நடிகருக்கான விருது என மூன்று தேசிய விருதுகளை குவித்தது இந்தப் படம்.

தெலுங்கு ரீமேக்
இந்நிலையில் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தமிழில் இயக்குநர் மோகன் ராஜா இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நடிகை நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.4 கோடி சம்பளம்
அந்தாதுன் தெலுங்கு ரிமேக்கில் நித்தின் ஹீரோவா நடிக்கிறார். தெலுங்கில் தபு கேரக்டரில் நடிக்க நடிகை நயன்தாராவை படக்குழுவினர் அணுகியதாக கூறப்படுகிறது. அப்போது நடிகை நயன்தாரா 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தெரிகிறது.

நயன்தாரா மறுப்பு
இந்நிலையில் இந்தப்படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரத்திலேயே நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக கதைக்கு தானே மையமாக இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்த்து வருகிறார்.

தகாத உறவு
இந்நிலையில் அந்தாதுன் படத்தில் தபு நடித்த ரோல் நெகட்டிவானது, திருமணத்திற்கு மீறிய தகாத உறவை சித்தரிக்கும் ரோல் என்பதால் தெலுங்கு ரீமேக்கில் அந்த ரோலில் நடிக்க நயன்தாரா மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜனி படம்
நடிகை நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது ஆனால் லாக்டவுன் காரணமாக அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது. இதனை தொடர்ந்து நெற்றிக்கண், ரஜினியின் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











