காதலரின் மார்பில் சாய்ந்து படு நெருக்கமாக ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா.. திணறும் இணையம்!

சென்னை: நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனின் மார்பில் சாய்ந்து படு நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

விக்கியுடன் காதல்

விக்கியுடன் காதல்

விக்கி இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதரில் உள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல்

அவ்வப்போது இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதும், அங்கிருந்தபடி போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லவில்லை.

ஜோடியாக பறந்து..

ஜோடியாக பறந்து..

இருப்பினும் கோவா, கொச்சின் என தனி விமானத்தில் இருவரும் ஜோடியாக பறக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும், கோவா சென்றது, ஓணம் கொண்டாடியது என பல போட்டோக்கள் வெளியானது.

கடைசியாக கேரளா

கடைசியாக கேரளா

இதேபோல் நயன்தாரா அண்ணாத்த படப்பிடிப்புக்காக தனியாக சென்ற போட்டோக்களும் வெளியாகி இணையத்தில் ட்ரென்ட்டானது. கடைசியாக நயனும் விக்கியும் கேரளாவுக்கு தனி விமானத்தில் சென்றனர்.

நயனின் கையைப் பிடித்து

நயனின் கையைப் பிடித்து

அப்போது விமானத்தில் இருந்து இறங்கிய நயன்தாராவை கையை பிடித்து பக்குவமாகவும் பாதுகாப்பாகவும் இறக்கி விட்டார் விக்கி. அந்த போட்டோக்கள் இணையத்தை திணறடித்தது.

விக்கியின் மிரர் செல்பி

விக்கியின் மிரர் செல்பி

இந்நிலையில் நயன்தாராவும் விக்கியும் சேர்ந்து எடுத்த சில போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது நயன்தாரா பனியன் ஸ்கர்ட் அணிந்துள்ளார். விக்கி சிவப்பு நிற டிஷர்ட் அணிந்து நயனை அணைத்தபடி மிரர் செல்பி எடுத்துள்ளார்.

காதலரின் மார்வில் சாய்ந்து

காதலரின் மார்வில் சாய்ந்து

இதில் ஃபிரி ஹேர் விட்டு பொம்மையை போல் உள்ளார் நயன்தாரா. இதேபோல் மற்றொரு போட்டோவில் ஜீன்ஸ் ஓவர்கோட் அணிந்துள்ள நயன்தாரா கூலர்ஸ் அணிந்து விக்னேஷ் சிவனின் மார்பில் சாய்ந்து அவரை உற்றுப் பார்த்து ரொமான்ஸ் செய்கிறார்.

மேட் ஃபார் ஈச் அதர்

மேட் ஃபார் ஈச் அதர்


இந்த போட்டோக்கள் நயன்தாரா பெயரில் உள்ள டிவிட்டர் அக்கவுண்டில் இருந்து ஷேர் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டோக்களுக்கு #VikkyNayan என்ற ஹேஷ்டேக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மேட் ஃபார் ஈச் அதர் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X