4 மொழிகளில் வெளியாகும் நயன்தாரா படம்.. அழகான முதல் பாடல் வெளியானது!
சென்னை : நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது.
இதையடுத்து தற்போது அவரது நடிப்பில் ஓ2 படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிஎஸ் விக்னேஷ் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது பாடலும் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் ஓ2 படம்
நடிகை நயன்தாரா அடுத்தடுத்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் ஓ2 என்ற படம் ரிலீசாக உள்ளது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. படத்தில் அழகான அம்மாவாக நயன்தாரா நடித்துள்ளார்.

மகனை காப்பாற்ற போராட்டம்
உடல்நல பிரச்சினை காரணமாக நயன்தாராவின் மகனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு விபத்தில் சிக்கும் நயன்தாரா, எப்படி தன்னுடைய மகனின் ஆக்சிஜனை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றி அதன்மூலம் தனது மகனையும் காப்பாற்றுகிறார் என்பதாக கதை எடுக்கப்பட்டுள்ளது.

த்ரில்லர் படம்
ஏற்கனவே மாயா, ஐரா போன்ற த்ரில்லர் கதைக்களங்களில் நயன்தாரா நடித்துள்ள நிலையில் இந்தப் படமும் அந்த பாணியில் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
முதல் பாடல் வெளியீடு
இதனிடையே இன்றைய தினம் வெளியாகியுள்ள படத்தின் முதல் பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் தன்னுடைய மகனை நயன்தாரா கொஞ்சுவது கவிதையாக காணப்படுகிறது. ஆனாலும் அவனுடைய செயற்கை சுவாசத்தில் அவர் மிகுந்த கவனமாக இருக்கிறார்.

4 மொழிகளில் வெளியீடு
நயன்தாராவிற்கு தென்னிந்தியாவில் மட்டுமின்றி இந்திய அளவில் ரசிகர்கள் காணப்படுகின்றனர். இதையொட்டியே தற்போது அவர் பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் நேரடியாக ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











