அமெரிக்க இதழுக்காக அமேஸிங் போஸ் கொடுத்த நயன்தாரா.. ப்பா.. என்னா கிளாமர்.. வாயை பிளக்கும் ரசிகாஸ்!
சென்னை: நடிகை நயன்தாரா அமெரிக்க மாத இதழுக்காக குட்டைப் பாவாடையில் கிக்காக போஸ் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வருகிறார். ரஜினி, அஜித், விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
கடைசியாக நடிகர் ரஜினிக்காந்தின் தர்பார் படத்தில் நடித்தார் நயன்தாரா. அதில் பார்க்கும் அனைவருமே வாவ் சொல்லும்படி மிரட்டல் அழகில் கொள்ளை கொண்டார்.

சிம்புவுடன் காதல்
பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியவர் நடிகை நயன்தாரா. நடிகர் சிம்புவை காதலித்தார். இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன்பிறகு இயக்குநர் பிரபுதேவாவுடன் காதல் கொண்டார் நயன்தாரா.

பிரபு தேவாவுடன் காதல்
இருவரும் திருமணத்திற்கு தயாராகினர். பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகும் முடிவில் இருந்த நயன்தாரா சினிமாவில் இருந்து விலக முடிவு செய்தார். ஆனால் அந்த திருமணமும் கைகூடவில்லை. இருவரின் காதலும் முறிந்து இருவரும் பிரிந்தனர்.

கோவா டூர்
தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா. லிவிங் டூ கேதரில் வசித்து வரும் இருவரும் ஓணம் பண்டிகையை கொண்டாடிய கையோடு கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு விடுமுறையை கொண்டாடிய நயன்தாரா, காதலரான விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை பார்ப்பவர்கள் பிரமிக்கும்படி கொண்டாடினார்.

அமெரிக்க மாத இதழ்
அதனை தொடர்ந்து தனி விமானம் மூலம் மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தனர் விக்கியும் நயன்தாராவும். விமானத்தில் இருந்து அவர்கள் இறங்கிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நடிகை நயன்தாரா அமெரிக்க மாத இதழ் ஒன்றுக்கு போஸ் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.

பட்டன்லெஸ் டாப்ஸ்
பட்டன்லெஸ் டாப்ஸ், ஷார்ட் டைட் ஸ்கர்ட் என ஹாலிவுட் நடிகையை போல் போஸ் கொடுத்துள்ளார். முன்னழகு அரைகுறையாய் தெரிய செம கிளாமர் காட்டி கிறங்க வைத்துள்ளார். vogue fashion magazine என்ற அமெரிக்காவின் மாத இதழுக்கு இப்படி போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது வைரல்
கடந்த ஆண்டு போஸ் கொடுத்த இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கார்ஜியஸ், பியூட்டிஃபுல், குயின் என வர்ணித்துள்ளனர். இந்த போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











