Don't Miss!
- News
சொந்தமாக 140 கார்கள்.. கோடீஸ்வர அமைச்சர்.. பாதுகாப்பு அதிகாரியாலேயே பலி.. யார் இந்த நபா கிஷோர் தாஸ்?
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Finance
மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
கார்த்தி படத்துக்கு நோ சொன்ன நயன்தாரா.. எதுக்காக தெரியுமா?
சென்னை : நடிகை நயன்தாரா அடுத்தடுத்த சிறப்பான வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் இவரது படங்களின் எண்ணிக்கை குறையவில்லை.
பிரித்விராஜ் நடிப்பில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள படத்தில் பிரித்விக்கு ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா.
தொடர்ந்து ஷாருக்கான், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
நம்ம சமுத்திரக்குமாரிக்கு கல்யாணத்துல இன்டரஸ்ட் இல்லையாமே.. அவரே சொன்ன தகவல்!

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தென்னிந்திய மொழிப் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதன்மூலம் பாலிவுட்டிலும் நுழைந்துள்ளார் நயன்தாரா. சமீபத்தில் விக்னேஷ் சிவனுடன் இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

நயன்தாரா திருமணம்
நயன்தாராவின் திருமணம் ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் சூழ வெகு விமரிசையாக நடைபெற்றது. சமீபத்தில் வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு இந்த ஜோடி பெற்றோராக மாறியுள்ளது. இதனிடையே இவரது நடிப்பில் நாளை கோல்ட் படம் ரிலீசாகவுள்ளது. தமிழிலும் கோல்ட் படம் ரிலீசாக உள்ளது. பிரபல மலையாளப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

நயன்தாராவின் அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து கனெக்ட், நயன்தாரா 75, இறைவன் ஆகியப் படங்களிலும் நடித்து வருகிறார் நயன்தாரா. மற்ற நடிகர், நடிகைகளை போலவே இவரும் தன்னுடைய சினிமா கேரியரில் சிறப்பான பல சூப்பர் ஹிட் படங்களை தவற விட்டுள்ளார். அதில் கார்த்தி நடிப்பில் வெற்றி பெற்ற பையா படமும் ஒன்று.

கார்த்தி படத்திற்கு நோ சொன்ன நயன்
கார்த்தியுடன் பையா படத்தில் ஜோடி சேர்ந்திருந்தார் தமன்னா. லிங்குசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படம், காதல் படமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தில் நடிக்க முதலில் லிங்குசாமி நயன்தாராவைத்தான் தேர்வு செய்திருந்தாராம். நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சம்பள விவகாரம் காரணமாக இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவிற்கு கிடைக்காமல் போயுள்ளது.

சிறப்பான கார்த்தி -நயன்தாரா ஜோடி
இதுகுறித்து இயக்குநர் லிங்குசாமி சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார். கார்த்தியுடன் இந்தப் படத்தில் வாய்ப்பு தவறினாலும் காஷ்மோரா படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார் நயன்தாரா. அந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் இந்த ஜோடி நடித்திருந்தாலும் சிறப்பான ஜோடியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.