Nayanthara: மகனுடன் கொச்சி ஏர்போர்ட்டிற்கு வந்த நயன்தாரா.. இன்னொரு மகன்
கொச்சி: முன்னணி நடிகை நயன்தாரா விஜய், அஜித், ரஜினி, சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். தொடர்ந்து நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியான கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்டு வாடகைத்தாய் முறையில் இரு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் நயன்தாரா. இருந்தபோதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மேலும் ரௌடி பிக்சர்ஸ் என்ற தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் சார்பில் அடுத்தடுத்த படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் தன்னுடைய குழந்தைகள் உயிர் மற்றும் உலக்குடன் தொடர்ந்து நயன்தாராவை சேர்ந்து அடுத்தடுத்து பார்க்க முடிகிறது. மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தன்னுடைய குழந்தைகளுடன் இணைந்து இருக்கும்படியான பல வீடியோக்களை அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து தமிழ். தெலுங்கு. மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ள நயன்தாரா, நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவருக்கு பல படங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகியுள்ள நயன்தாரா, அந்த குழந்தைகளை கண்ணும் கருத்துமாக மிகவும் கவனத்துடன் வளர்த்து வருகிறார்.
ஏர்போர்ட்டில் மகனுடன் நயன்தாரா: தான் எங்கே சென்றாலும் குழந்தைகளை கையுடன் அழைத்து செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளார் நயன்தாரா. குழந்தைகளை பிரிய முடியாத காரணங்களால் சென்னையிலேயே ஷூட்டிங்கை நடத்த அவர் கேட்டுக் கொள்வதாகவும் தொடர்ந்து அவர் மீது பல விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் நயன்தாரா தன்னுடைய குழந்தையுடன் கொச்சி ஏர்போர்ட்டில் இன்றைய தினம் வந்ததை பார்க்க முடிந்தது. குழந்தையை தானே தூக்கிக் கொண்டு வந்த நயன்தாரா, காரில் ஏறிவிட்டு உடமைகளை பொறுப்பாக வாங்கி உள்ளே வைப்பதாக தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் பார்க்க முடிகிறது.
ஒரு மகனுடன் நயன்தாரா: எங்கே சென்றாலும் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் இணைந்து காணப்படுகிறார் நயன்தாரா. தன்னுடைய இன்ஸ்டாகிராமிலும் தன்னுடைய குழந்தைகளுடன் தான் இருக்கும் படியான வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் கொச்சி ஏர்போர்ட்டில் தன்னுடைய ஒரு குழந்தையுடன் மட்டுமே நயன்தாரா காணப்பட்டார். இன்னொரு குழந்தையை அவர் உடன் அழைத்து வரவில்லை. விக்னேஷ் சிவன் அழைத்து வருகிறாரா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது எல்ஐசி படத்தில் விக்னேஷ் சிவன் மிகவும் பிசியாக உள்ளதால் அவர் தொடர்ந்து நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் காணப்படுவது குறைந்துள்ளது.
அடுத்தடுத்த படங்கள்: அடுத்தடுத்து நயன்தாரா படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதேபோல அஜித்துடன் இணையவிருந்த படம் கைநழுவிப் போனதையடுத்து, அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து எல்ஐசி படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தயாரிப்பிலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகின்றனர். குழந்தை வளர்ப்பிலும் இவர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications