சுந்தர் சி இயக்கத்தில் இணையும் நயன்தாரா.. மிரட்டல் கூட்டணியில் மூக்குத்தி அம்மன் 2 படம்!
சென்னை: நடிகை நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படம் கடந்த 2020ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் படத்தை அவர் மிக சிறப்பாக இயக்கியிருந்தார்.
மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த படத்தின் 2வது பாகம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பு இன்றைய தினம் வெளியாகி உள்ளது. நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ள இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவில்லை. மாறாக சுந்தர் சி இயக்கவுள்ளார். இந்த மாற்றம் படத்திற்கு எந்த வகையில் சிறப்பாக அமையும் என்பது குறித்து ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

மூக்குத்தி அம்மன் படம்: நடிகை நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் கடந்த 2020ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் 2வது பாகம் குறித்த அறிவிப்பை வேல்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா லீட் கேரக்டரில் நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படம் கடந்த 2020ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்திந்தார் ஆர்ஜே பாலாஜி. மூக்குத்தி அம்மனை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது.
மூக்குத்தி அம்மன் 2 அறிவிப்பு: இருந்தபோதிலும் படத்தில் தனுக்கேயுரிய ஸ்டைலில் பல அரசியலை மற்றும் சமூக கருத்துக்களை பேசியிருந்தார் ஆர்ஜே பாலாஜி. இந்த படத்தின் அடுத்த பாகம் குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்த 2வது பாகத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சுந்தர் சி இயக்க உள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இன்றைய தினம் இதை வேல்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தை சுந்தர் சி இயக்க உள்ளது குறித்தும் உறுதிப்படுத்தியுள்ளது. லீட் கேரக்டரில் முதல் பாகத்தில் அம்மனாக நடித்திருந்த நயன்தாராவே நடிக்கவுள்ளார்.
சுந்தர் சி இயக்கம்: படம் குறித்து வீடியோவுடன் சமூக வலைதளப்பக்கத்தில் வேல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் சுந்தர் சியை மற்றும் அம்மனின் சூலத்தை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ளது. இதில் நயன்தாராவின் லுக் இல்லாத நிலையில் அவரது கேரக்டர் எப்படி இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். முன்னதாக சுந்தர் சி இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரண்மனை 4 வெளியாகி மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இந்த படத்தில் தமன்னா, ராஷி ராசி கண்ணா, சுந்தர் சி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
எப்படி இருக்கும் மூக்குத்தி அம்மன் 2?: அரண்மனை 4 படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணாவின் க்யூட்டான பாடல் ஒன்றும் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் அதேபோன்ற ஸ்டைலில் மூக்குத்தி அம்மன் படமும் இருக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. முன்னதாக வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவை சிறப்பாக காட்சிப்படுத்தியிருந்தார் ஆர்ஜே பாலாஜி. மூக்குத்தி அம்மனாக அவர் சொல்லும் பல கருத்துக்கள் சமூகத்திற்கு தேவையானதாக அமைந்திருந்தது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தாறுமாறாக உள்ளது.


Click it and Unblock the Notifications











