ஆமா.. ஊசி எங்கே? உண்மையிலேயே தடுப்பூசி போட்டாரா நயன்? வெடித்த சர்ச்சை.. விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக வெளியிட்ட போட்டோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. பல மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகள் மட்டுமின்றி மாயனங்களும் நிரம்பி வழிகின்றனர்.

கொரோனாவால் பலி

கொரோனாவால் பலி

கொரோனா பரவலில் இந்தியாவில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 360க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

பிரபலங்கள் தடுப்பூசி

பிரபலங்கள் தடுப்பூசி

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள தமிழக அரசு, தடுப்பூசி போடும் பணிகளையும் துரிதப்படுத்தி வருகிறது. தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சினிமா பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

காதலருடன் தடுப்பூசி

காதலருடன் தடுப்பூசி

தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போட்டோக்களையும் தங்களன் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நேற்று தடுப்பூசி போட்டு கொண்டார்.

ஊசியை காணோம்

ஊசியை காணோம்

நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த போட்டோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நயன்தாரா ஊசி போட்டுக் கொள்ளும் போட்டோவில் ஊசியை காணவில்லை.

எதற்கு இந்த நடிப்பு?

எதற்கு இந்த நடிப்பு?

இதனை பார்த்த நெட்டிசன்கள் எங்கே ஊசியை காணோம்? எல்லாம் பொய்யா? எதற்கு இந்த நடிப்பு என நயன்தாரா ஊசி போட்ட போட்டோவை ஜூம் செய்து கேள்விகளை துளைத்தெடுத்து வருகின்றனர்.

என்ன சாதிக்க போறீங்க?

என்ன சாதிக்க போறீங்க?

நயன்தாரா ஊசி போடும் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், ஊசி எங்கே...? இந்த மாதிரி பித்தலாட்டம் பண்ணி என்ன சாதிக்க போறீங்க? என கேட்டுள்ளார்.

வலது கையில் போடமாட்டார்கள்

வலது கையில் போடமாட்டார்கள்

நயன்தாரா தடுப்பூசி போடும் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், தடுப்பூசி வலது கையில் போட மாட்டார்கள்... ஆனால் இது எப்படி என கேட்டுள்ளார்.

எல்லாம் நடிப்பா கோபால்

நயன்தாராவின் ஊசி போட்ட போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், என்ன ஊசிய காணல. எல்லாம் நடிப்பா கோபால் என கேட்டு கிண்டலடித்துள்ளார்.

எப்படி போட முடியும்?

மற்றொரு நெட்டிசனான இவர், நயன்தாரா 45 வயதுக்கு கீழ்தான் உள்ளார். அவர் எப்படி தமிழ்நாட்டில் தடுப்பூசி போட முடியும்? ஏமாத்திட்டாங்களா எங்கள என கேட்டு பங்கம் பண்ணியுள்ளார்.

என்னடா இது?

நயன்தாரா ஊசி போடும் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், ஊசியே இல்லையே ஊசி போடுறீங்களே எப்படி...

என்ன எலவுடா இது என கேட்டுள்ளார்.

வேறு போட்டோ போடுங்கள்

மற்றொரு நெட்டிசனான இவர், சகோதரி பலருக்கு சந்தேகம் நீங்கள் ஊசிபேடவில்லை என்று நீங்களும் சிவன் சாரும் இருவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டீர்கள் என்று தெரியும் பலர் கலாய்க்கிறார்கள் வேறு போட்டோ இருந்தால் பதிவு போடவும் உங்களை கலாய்த்த பதிவை பதிவிடுகிறேன் என்னை மன்னி்கவும் என நயன்தாரவுக்கு கோரிக்கை

விடுத்துள்ளார்.

ஏதோ புது ஷூட்டிங் போல

விக்னேஷ் சிவனுக்கு தடுப்பூசி போடும் போது தெரியும் சிரஞ்ச், நயன்தாராவுக்கு போடும் போது தெரியாத போட்டோவை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், ஏதோ புது படம் ஷூட்டிங் போலருக்கு.. என பதிவிட்டுள்ளார்.

தடுப்பூசி விளம்பர நாடகங்கள்

மற்றொரு நெட்டிசனான இவர், சும்மா ஒரு டம்மி ஊசியையாச்சும் வச்சிருந்திருக்கலாம்...! சினிமா படப்பிடிப்புனு நினைச்சிட்டாங்க போல...! தடுப்பூசி விளம்பர நாடகங்கள்...! என பதிவிட்டு மரணமாய் கலாய்த்துள்ளார்.

ஊசியே தெரியாமல் ஊசி

மற்றொரு நெட்டிசனான இவர் வலி தெரியாமல் ஊசி போடுவதை அறிந்திருப்போம்.. ஊசியே தெரியாமல் ஊசி போடுவதை பார்த்தது உண்டா..? என கேட்டு கேலி செய்துள்ளார்.

போட்ட மாதிரி தெரியல..

மற்றொரு நெட்டிசனான இவர் சும்மா கிள்ளி விடு பாப்போம்.. வலது பக்கம் யாருக்கும் ஊசி போட்ட மாதிரி தெரியல.. என கேலியாக பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X