சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. தடுப்பூசி போட்டது உண்மைதான்.. நயன் தரப்பிலிருந்து வெளியான புதிய போட்டோ!
சென்னை: நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் புதிய போட்டோ வெளியாகியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தியளவில் தமிழகத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
உயிரிழப்புகளும் நாளுக்குக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மக்களுக்கு விழிப்புணர்வு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே சினிமா பிரபலங்கள் பலரும் கொரோன தடுப்பூசி போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ட்ரென்ட்டான போட்டோஸ்
அந்த வகையில் நடிகை நயன்தாராவும் அவரது காதலரான விக்னேஷ் சிவனும் நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரென்ட்டானது.

ஊசியை காணோம்
ஆனால் நயன்தாரா தடுப்பூசி போட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், தடுப்பூசி போட்டாரா இல்லையா என்ற சந்தேகம் எழுப்பினர். காரணம், விக்னேஷ் சிவன் ஊசி போட்டுக் கொள்ளும் போது தெரிந்த சிரிஞ்ச் நயன்தாரா போடும் போது தெரியவில்லை.

சர்ச்சையான தடுப்பூசி
இதனால் ஊசி போட்டுக்கொண்டது போல் நயன்தாரா நடித்துள்ளார் என நெட்டிசன்கள் விமர்சித்தனர். மேலும் வலது கையில் எப்படி தடுப்பூசி போடுவார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் நயன்தாரா தடுப்பூசி போட்ட விஷயம் சர்ச்சையானது.

புதிய போட்டோ
மேலும் பலர் வேறு போட்டோவை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நயன்தாரா தரப்பில் இருந்து புதிய போட்டோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

முடிவுக்கு வந்த சர்ச்சை
அதில் நயன்தாரா தடுப்பூசி போடும் போது அவரது கையில் சிரஞ்ச் இருக்கும் பகுதி வட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா தடுப்பூசி போட்டது உண்மைதான் என கூறி வருகின்றனர். இதன்மூலம் நயன்தாரா தடுப்பூசி சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











