தோள்மீது கைபோட்டு மனைவியை ரசிக்கும் விக்னேஷ் சிவன்.. நயன்தாராவுடன் உற்சாக நடை!

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் 7 ஆண்டுகள் காதலித்து பின்பு திருமணம் செய்துக் கொண்டதும், வாடகைத்தாய் முறையில் இரு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதும் தெரிந்த விஷயம்தான். இதுகுறித்தெல்லாம் எதுவும் யோசிக்காமல் அவர்கள் தொடர்ந்து காதலர்களாகவே தங்களின் வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றனர்.

நித்தம் ஒரு கொண்டாட்டம், அதுகுறித்து ரசிகர்களுடன் பகிர்வு என்று இவர்களின் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இருவரும் அவரவர்களின் கேரியரையும் பெஸ்டாக செய்து வருகின்றனர். அடுத்ததாக LIC படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நயன்தாராவும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

nayanthara vignesh shivan instagram

நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவர்களுக்கு வாடகைத்தாய் முறையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர்.அவர்களை கொண்டாட்டத்துடன் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் வளர்த்து வருகின்றனர். எங்கு சென்றாலும் அவர்களை உடன் அழைத்து செல்வதை பார்க்க முடிகிறது. நயன்தாராவும் தன்னுடைய சூட்டிங்கை சென்னையை அடுத்தே வைத்துக் கொள்ள வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், குழந்தை வளர்ப்பை மட்டுமில்லாமல் தங்களது வாழ்க்கையையும் கொண்டாட்டமாகவே வைத்து வருகிறது இந்த ஜோடி.

சைமா விருது வாங்கிய ஜோடி: எங்கு சென்றாலும் ஒன்றாகவே இவர்கள் செல்வதை பார்க்க முடிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் நடந்த சைமா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் இருவரும் ஒன்றாக மேடையேறி விருதை பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாராவும், சிறந்த பாடலாசிரியருக்கான விருதை விக்னேஷ் சிவனும் பெற்றனர். இந்நிலையில் இந்த க்யூட் ஜோடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தனர். சமூக வலைதளங்களிலும் இவர்கள் இருவரும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறது. மேலும் தங்களது கேரியரிலும் அடுத்தடுத்த பிசினசிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் ரொமான்டிக் போஸ்ட்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதேபோல நயன்தாராவின் மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அடுத்ததாக கவினுடன் இணைந்து ஒரு படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து காஸ்மெட்டிக் துறையில் அடுத்தடுத்த பிசினஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில் தங்களுடைய கொண்டாட்டங்களுக்கு அடுத்தடுத்து டைம் ஒதுக்கி சிறப்பாக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் இவர்கள் இருவரின் ரொமாண்டிக் புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

ஸ்டைலிஷ் லுக்கில் போட்டோஸ்: தற்போது இவர்கள் இருவரும் மிகவும் ஸ்டைலிஷ் மற்றும் கேஷுவல் கெட்டப்பில் சாலையில் நடந்து செல்லும்படியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். சாலையாக இருந்தாலும் தன்னுடைய மனைவியின் தோள்மீது கைப்போட்டு அவரை விக்னேஷ் சிவன் ரசிப்பதாக இந்தப் புகைப்படங்களில் காணப்படுகிறது. அடுத்தடுத்து சூப்பர் கெமிஸ்ட்ரியுடன் இவர்கள் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், நயன்தாராவை ஏறக்குறைய 9 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து வருகின்றனர். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டில்தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X