காதலனுடன் பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பிரபல நடிகை.. அப்போ விரைவில் டும்டும்டும்?

சென்னை: பிரபல நடிகை தனது காதலனுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த போட்டோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல தடைகளை தாண்டி தன்னுடைய விடாமுயற்சியாலும் திறமையாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அடுத்தடுத்து காதல் தோல்விகள், விமர்சனங்கள் என்று இருந்தபோதும் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.

போட்டோக்கள் வைரல்

போட்டோக்கள் வைரல்

தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நடிகை நயன்தாரா. இருவரும் அடிக்கடி வெளிநாட்டில் விடுமுறையை கழிக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் பிறந்தநாள்

அமெரிக்காவில் பிறந்தநாள்

அண்மையில் நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாடினார். தனது காதலனுடன் அமெரிக்காவில் பிறந்தநாளை கொண்டாடினார் நயன்தாரா. அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

மூக்குத்தி அம்மனாக

மூக்குத்தி அம்மனாக

தற்போது நடிகர் ஆர்ஜே பாலாஜி கதை திரைக்கதையில் உருவாகவுள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இதில் மூக்குத்தி அம்மனாக நயன்தாராவே நடிக்கிறார்.

நயன்தாரா விரதம்

நயன்தாரா விரதம்

இந்த படத்திற்காக படக்குழுவினர் அசைவத்தை தவிர்த்து விரதம் மேற்கெண்டனர். இதேபோல் நடிகை நயன்தாராவும் மூக்குத்தி அம்மனுக்காக விரதம் மேற்கொண்டதாக கூறப்பட்டது.

பகவதி அம்மன் கோவில்

பகவதி அம்மன் கோவில்

மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி சென்ற நடிகை நயன்தாரா அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார்.

சிறப்பான வரவேற்பு

சிறப்பான வரவேற்பு

தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் பகவதி அம்மன் கோவிலில் வழிபட்டார் நயன்தாரா. அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பரபரப்பு

நயன்தாரா பகவதி அம்மன் கோவிலுக்கு வந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அங்கு குவியத் தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்

பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்

இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் நயன்தாராவையும் விக்னேஷ் சிவனையும் போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

விரைவில் திருமண தேதி

விரைவில் திருமண தேதி

நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுக்காக அண்மையில் இந்து மதத்துக்கு மாறினார் என்ற தகவல் பரவியது. இதனிடையே நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X