சொதப்பிய பிளான்…திருமண புகைப்படத்தை வெளியிடும் விக்கி..இதுதான் காரணமா?

சென்னை : நயன்தாரா திருமணத்தை வைத்து பக்காவாக பிசினஸ் பிளான் போட்டிருந்தார். ஆனால், அது தற்போது சொதப்பியதால் நயன்தாரா அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Nayanthara Marriage-க்கு Cute-ஆ வந்து வாழ்த்திய Surya, Jyothika

போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன். நயன்தாரா, விஜய்சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் வரும் "தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே" என்ற பாடல் விஜய்சேதுபதிக்கு ஒர்க்கவுட் ஆகியதோ இல்லையோ விக்னேஷ் சிவனுக்கு நன்றாக ஒர்க்கவுட்டாகி இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது.

க்யூட் ஜோடி

க்யூட் ஜோடி

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும், அனைவரின் கண்படும் அளவுக்கு இருவரும் க்யூட் ஜோடியாக வலம் வந்தனர். கோவில்கள், சினிமா நிகழ்ச்சி, குடும்பவிழா, பிறந்தநாள் கொண்டாட்டம் என எதுவானாலும், இவர்கள் இருவரும் கைபிடித்துக்கொண்டு நிற்பதை பார்த்தாலே, அடடா... காதலித்தால் இப்படி காதலிக்க வேண்டும் என்று காதலிக்கும் இளசுகளுக்கு சற்று பொறாமையாவே இருக்கும்.

ஒரு பைசாகூட செலவு இல்லை

ஒரு பைசாகூட செலவு இல்லை

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக காதல் புறாவாக சுற்றிவந்த இந்த காதல் ஜோடி ஜூன் 9ந் தேதி திருமண பந்தத்தில் இணைந்தனர். மகாபலிபுரம் ரிசாட்டில் தடபுடலாக இவர்களது திருமணம் நடைபெற்றது. 200பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அதில் 30 விவிஜபிக்களுக்கு கொடுக்கப்பட்டு அழைப்பிதழ் உடன் க்யூஆர் கோடு காண்பித்தால் உள்ளேவர முடியும் என டைட் செக்யூரிட்டியுடன் திருமணம் நடந்தது.

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திடம்

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திடம்

திருமணத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, அனிருத்,சூர்யா,ஷாருக்கான், அட்லி ஆகியோர் கலந்து கொண்டார்கள் என்று மட்டுமே தகவல்கள் வெளிவந்தன. அதுகுறித்த எந்த புகைப்படமும் வெளியாகவில்லை. விக்னேஷ் சிவன் தாலி கட்டும் ஒரு சில புகைப்படத்தை மட்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். நயன்தாரா தனது திருமணத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கு ரூ25 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதால் இத்தனை கெடுபிடி காட்டப்பட்டதாக கூறப்பட்டது.

அப்செட்டான நயன்தாரா

அப்செட்டான நயன்தாரா

இந்நிலையில், பொத்தி பொத்தி வைத்திருந்த புகைப்படத்தை கடந்த இருநாட்களாக விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார். அதாவது நயன்தாரா தனது திருமணத்தை வைத்து பக்கா பிசினஸ் பிளான் போட்டு இருந்தார். ஆனால், தற்போது அந்த நிறுவனம் தொகை அதிகமாக இருப்பதாக கூறி பின்வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், அப்செட்டான நயன்தாரா, ஒவ்வொரு போட்டோக்களையும் வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் திருமணம் நடந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் இனி நடிகையின் திருமண வீடியோவை பார்க்கும் ஆர்வமும் ரசிகர்களிடம் குறைந்துவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X