ரூட்டை மாற்றும் நயன்தாரா.. வெற்றியை கொடுக்குமா நயன்தாரா கணக்கு!
சென்னை : நடிகை நயன்தாரா தற்போது திருமணம், ஹனிமூனை முடித்துக் கொண்டு ஜவான் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவனின் ஏகே62 படத்தில் அவர் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளார். இந்தப் படத்தில் அஜித்திற்கு அவர்தான் ஜோடி என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனை வைத்து மற்றொரு திட்டத்தையும் போட்டு வருகிறார் நயன்தாரா.

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 7 ஆண்டுகளா காதலித்து கடந்த மாதம் 9ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். மொத்த திரையுலகமே திரண்டுவந்து இவர்களது திருமணத்திற்கு வாழ்த்துக் கூறியது. மிகவும் பிரம்மாண்டமாக மகாபலிபுரம் ரெசார்ட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

ஹனிமூன் ட்ரிப்
தொடர்ந்து திருப்பதி விசிட், நயன்தாரா பெற்றோர் வீட்டிற்கு விசிட், தாய்லாந்து ஹனிமூன் விசிட் என இந்த ஜோடி ரொம்பவே பிசி. ஆனால் கடந்த வாரத்தில் ஹனிமூன் ட்ரிப்பை முடித்துக் கொண்டு இருவரும் நாடு திரும்பினர். இந்த விசிட்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வைரலாகின.

மீண்டும் சூட்டிங்
ஹனிமூன் முடித்து கொண்டு நாடு திரும்பிய நயன்தாரா தொடர்ந்து ஷாருக்கான் -அட்லி கூட்டணியில் உருவாகிவரும் ஜவான் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்கும்வகையில் மும்பைக்கு சென்றுள்ளார். அங்கு ஷாருக் மற்றும் நயன்தாரா காம்பினேஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி
இந்நிலையில் நயன்தாரா தற்போது சினிமாவை தவிர்த்து வேறு விஷயத்திலும் கவனம் செலுத்தவுள்ளார். வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதிவரை சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்ப்டட வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

துவக்கவிழாவை நடத்த விண்ணப்பம்
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவை நடத்தித்தர நயன்தாரா தற்போது விருப்பம் தெரிவித்து இதற்கான ஒப்பந்தத்திற்கும் விண்ணப்பித்துள்ளாராம். திங்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தனது கணவரைக் கொண்டு இந்த துவக்க விழாவை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
Recommended Video

புதிய முயற்சி
இந்த நிகழ்ச்சி ரவுடி பிக்சர்ஸ் நிறவனத்திற்கு தரப்படும் நிலையில் நிகழ்ச்சிக்கும் சிறப்பான விளம்பரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டுவரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி இந்த புதிய முயற்சியில் எப்படி செயல்படுவார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications











