Nayanthara: மகனை தாலாட்டு பாடி தூங்க வைக்கும் நயன்தாரா.. அம்மான்னாலே அழகுதான் இல்ல!
சென்னை: நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஜவான் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. படத்தில் ஷாருக்கான இரட்டை கெட்டப்புகளில் நடித்திருந்தார்.

தன்னுடைய கேரியரில் மிகவும் கவனமாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நயன்தாரா, சொந்த வாழ்க்கையிலும் சிறப்பான மனைவி மற்றும் தாயாக அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
மகன் உயிரை தாலாட்டு பாடி தூங்க வைக்கும் நயன்தாரா: நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக உள்ளவர். கடந்த பல வருடங்களாக ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் கவர்ந்துவரும் நயன்தாரா விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாலிவுட்டிலும் நயன்தாரா ஜவான் படம் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஷாருக்கான் -அட்லீ கூட்டணியில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியான ஜவான் படம் நயன்தாராவிற்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. தொடர்ந்து பாலிவுட்டில் பட வாய்ப்புகளையும் கொடுத்து வருகிறது. இதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்த தென்னிந்திய மொழிப் படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்திருந்த இறைவன் படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் அடுத்தடுத்த படங்களை அறிவிப்பதுடன் தன்னுடைய 9Skin என்ற புதிய பிசினசையும் அறிவித்துள்ளார். இதன் ப்ரமோஷனுக்காக வெளிநாடுகளில் நிகழ்ச்சியை நடத்திய நயன்தாரா, சமீபத்தில் தன்னுடைய மகன்களின் முதலாண்டு பிறந்த தினத்தையும் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அடுத்தடுத்து தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் புகைப்படங்கள், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
கடந்த ஆண்டில் நயன்தாரா திருமணம் நடைபெற்ற நிலயில் வாடகைத்தாய் முறையில் இரு குழந்தைகளுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பெற்றோர் ஆகியுள்ளனர். தங்களது குழந்தைகளுடன் அடுத்தடுத்த புகைப்படங்களை இந்த ஜோடி வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. உயிர் மற்றும் உலக் என இந்தக் குழந்தைகளின் பெயர்களையும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நயன்தாரா வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய மகன் உயிரை, அவரது மடியில் நயன்தாரா போட்டு தாலாட்டி தூங்க வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீச்சல் குளத்தின் அருகில் அமர்ந்தபடி தன்னுடைய குழந்தையை நயன்தாரா இந்த வீடியோவில் தாலாட்டி தூங்க வைக்கிறார். இந்த க்யூட் வீடியோவை அதிகமான அளவில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











