நயன்தாரா -விக்னேஷ் சிவன் ரொமான்டிக் புகைப்படம்... டுவிட்டரில் வைரல்!

சென்னை : நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா.

இந்நிலையில் இருவரும் இணைந்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் இவர் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து அண்ணாத்த படத்தில் இவர் நடித்திருந்தார்.

அண்ணாத்த படம்

அண்ணாத்த படம்

குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து வெளியான இந்த படத்தில் நயன்தாராவுக்கு சிறப்பான ரோல் இருந்தது. முன்னதாக ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்திலும் அவர் நடித்திருந்தார். விஜய்யின் பிகில் படத்திலும் ஜோடி போட்டு நடித்திருந்தார் நயன்தாரா.

தொடர்ந்து சிறப்பான படங்கள்

தொடர்ந்து சிறப்பான படங்கள்

தொடர்ந்து ஹீரோக்களுடனும் தன்னுடைய கேரக்டரை வெளிப்படுத்தும் வகையிலும் பல படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட்டில் இவர் முன்னணி நாயகியாக விளங்கி வருகிறார். இவர் நடித்தால் அந்த படம் ஹிட்டுதான்.

நெற்றிக்கண் படம்

நெற்றிக்கண் படம்

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நெற்றிகண் படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்று தந்துள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா.

காத்து வாக்குல 2 காதல் படம்

காத்து வாக்குல 2 காதல் படம்

விஜய் சேதுபதியுடன் இவர் இந்த படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். படத்தில் சமந்தாவும் காணப்படுகிறார். இந்தப்படம் இந்த மாதத்தில் வெளியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகளை சில தினங்களுக்கு முன்பு முடித்துக் கொடுத்துள்ளார் நயன்தாரா. இதன் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

இயக்குனர் விக்னேஷ் சிவனை விரைவில் நயன்தாரா மணம்முடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்த புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இருக்கும்படியான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரலான புதிய புகைப்படம்

வைரலான புதிய புகைப்படம்

அந்தப் புகைப்படம் வெளிநாட்டில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அந்த படத்தில் மிகவும் அழகாக காணப்படுகின்றனர். இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X