Nayanthara: மீண்டும் இணைந்த கோலமாவு கோகிலா டீம்.. நயன்தாராவின் மிரட்டல் மோஷன் போஸ்டர்!

சென்னை: நடிகை நயன்தாரா, யோகிபாபு கூட்டணியில் வெளியான கோலமாவு கோகிலா படம் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டடித்தது.

இந்தப் படத்தில் நயன்தாராவை காதலிக்கும் கேரக்டரில் யோகிபாபு நடித்திருந்தார். காமெடி மற்றும் கடத்தல் என இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் நயன்தாரா, யோகிபாபு கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்தப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Actress Nayanthara & Yogibabu team joined again for new movie named Mannangatti

நயன்தாரா -யோகிபாபு கூட்டணியில் புதிய படம்: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்த தென்னிந்திய அளவில் திரைத்துறையில் முன்னணி நடிகையாக உள்ளார். திருமணம், வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் என எவையும் இவரது கேரியரை சிறிதும் பாதிக்கவில்லை. மாறாக தற்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். ஷாருக்கானுடன் நயன்தாரா நடித்து கடந்த 7ம் தேதி ஜவான் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகி 800 கோடி ரூபாய் கலெக்ஷனை கடந்துள்ளது.

விக்னேஷ் சிவனை சமீபத்தில் திருமணம் செய்த நயன்தாரா, வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவானார். இவர்களது திருமணம் காதல் திருமணம். 7 ஆண்டுகள் காதலித்த இவர்கள் இருவரும் குடும்பத்தினரின் ஒப்புதலோடு திருமணம் செய்துக் கொண்டனர். இந்நிலையில் அடுத்தடுத்த படங்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவனுக்கு அஜித்துடனான படம் கைநழுவிய நிலையில், விரைவில் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை மேற்கொள்ளவுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகிபாபு இணைந்து நடித்திருந்த கோலமாவு கோகிலா, சிறப்பான நகைச்சுவையுடன் வெளியாகி ரசிகர்களை கட்டிப்போட்டது. இந்தப் படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் மாஸ் காட்டியிருந்தார் யோகிபாபு. தன்னுடைய அம்மாவின் சிகிச்சைக்காக போதைப்பொருள் கடத்தலில் நயன்தாரா மற்றும் குடும்பத்தனர் ஈடுபடும் நிலையில், அதில் தெரியாமல் சிக்கிக்கொண்டு யோகிபாபு தவிப்பதாக இந்தக் கதைக்களம் செல்லும்.

இந்நிலையில் நயன்தாராவின் அடுத்தப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு தற்போது அந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில் மண்ணாங்கட்டி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை ட்யூட் விக்கி இயக்கவுள்ளார். படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷீன் ரோல்டன் இசையமைப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வீடியோவில் கோயிலில் நீதிமன்றம் இருப்பது போன்ற காட்சியமைப்புகள் காணப்படுகின்றன. வித்தியாசமான கதைக்களத்துடன் இந்தப் படம் நயன்தாராவிற்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். சமீபத்தில் வெளியாகியுள்ள ஜவான் படம் நயன்தாராவிற்கு சிறப்பாக கைகொடுத்துள்ள நிலையில், பாலிவுட்டிலும் அவர் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X