Nayanthara: அன்னப்பூரணியாய் ஜொலிக்கும் நயன்தாரா.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: நடிகை நயன்தாராவின் 75வது படமாக உருவாகிவரும் அன்னப்பூரணி படத்தின் டைட்டில் சில தினங்களுக்கு முன்புதான் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அன்னப்பூரணி படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழுவினர் சிறப்பான போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர்.
நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சச்சு, ரேணுகா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது மட்டுமில்லாமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் அறம் போன்ற படங்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஜவான் மற்றும் இறைவன் படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தன. இதில் ஷாருக்கானுடன் நடித்திருந்த ஜவான் படம் சூப்பர் ஹிட்டாகி 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இறைவன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
நயன்தாராவின் 75வது படம்: இந்நிலையில் நயன்தாராவின் 75வது படமாக உருவாகியுள்ளது அன்னப்பூரணி படம். சமீபத்தில் இந்தப்படத்தின் டைட்டில் வீடியோவுடன் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. படத்தில் பிராமண பெண்ணான நயன்தாரா பிசினஸ் லாஜிஸ்டிக்ஸ் புத்தகத்தை படித்துக் கொண்டிருப்பதாகவும் அந்த புத்தகத்தில் நான் வெஜ் உணவுகளை பற்றிய புத்தகத்தை ஒளித்து வைத்து படிப்பதாக காணப்பட்டது. குடும்பத்தில் மற்றவர்கள் பூஜை, வழிபாடு என்றிருக்க நயன்தாரா இப்படி நடந்துக் கொள்வதாக காட்டப்பட்டுள்ளது.
அன்னப்பூரணி படத்தின் ரிலீஸ் தேதி: இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சச்சு, ரேணுகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அன்னப்பூரணி படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ள படக்குழுவினர் டிசம்பர் 1ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டரில் சமையலறையில் கரண்டியை பிடித்தபடி நயன்தாரா காணப்படுகிறார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இந்தப் படத்தை ஷங்கரின் உதவி இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். படம் டிசம்பர் 1ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். விரைவில் இசை வெளியீடும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோயினை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்த படங்கள்: திரைப்படங்கள் ஒருபுறம் மற்றொருபுறம் பிசினஸ் எனறு கலக்கி வருகிறார் நயன்தாரா. ஜவான் படத்தை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி படத்திலும் இவர் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து தமிழில் மண்ணாங்கட்டி என்ற படத்திலும் நயன்தாரா கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்கும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவரும் தன்னுடைய குழந்தைகளுடன் அதிகமான நேரத்தை செலவிடவும் விருப்பம் தெரிவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











