Annapoorani movie: நயன்தாராவின் அன்னபூரணி.. தமன் இசையில் ஆட்டம் போட வைக்கும் பாடல் வெளியீடு!
சென்னை: நடிகை நயன்தாரா, ஜெய், சத்யராஜ், ரேணுகா, சச்சு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் அன்னபூரணி.
இந்தப் படம் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரமோஷன்களில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார் நிலேஷ் கிருஷ்ணா. தமன் இசையமைத்துள்ளார்.
நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக தமிழில் கொண்டாடப்படுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வரும் நயன்தாரா, ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் கட்டிப் போட்டு வருகிறார்.
ஜவான் படம்: சமீபத்தில் வெளியான ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார் நயன்தாரா. ஷாருக்கான் லீட் கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்டவர்களும் நடித்துள்ள நிலையில் அட்லீ இயக்கத்தில் படம் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டிலும் படங்களில் கமிட்டாக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ரசிகர்களை கவராத இறைவன் படம்: தமிழில் சமீபத்தில் ஜெயம் ரவி -நயன்தாரா இணைந்து நடித்திருந்த இறைவன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தனி ஒருவன் படம் மூலம் இவர்களின் கெமிஸ்ட்ரி சிறப்பாக பேசப்பட்ட நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இறைவன் படம் ரசிகர்களை கவரத் தவறியுள்ளது. சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் ராட்சசன், போர்த்தொழில் படங்களின் வரிசையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அன்னபூரணியாக நயன்தாரா: இந்நிலையில் நயன்தாரா லீட் கேரக்டரில் நடித்துள்ள அன்னபூரணி படம் வரும் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. நாட் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், சமையல் துறையில் சாதிக்க நினைத்து அதில் களமிறங்குவதை மையமாக கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்கி இயக்கியுள்ளார் நிலேஷ் கிருஷ்ணா.
அன்னபூரணி பாடல் வெளியீடு: படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில டீசர், பாடல் என அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை படக்குழுவினர் உற்சாகப்படுத்தியுள்ளனர். தற்போது இந்தப் படத்தின் பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது. பாடலை பார்ப்பவர்களுக்கு உற்சாகமான மனநிலையை கொடுக்கும்வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. நயன்தாரா, ஜெய் ஆகியோர் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











