Nayanthara: இயக்குநர் அவதாரம் எடுக்கும் நயன்தாரா?.. வெளியான அழகிய புகைப்படம்!

சென்னை: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய சினிமாவில் சிறப்பான நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.

சமீபத்தில் பாலிவுட்டிலும் தனது என்ட்ரியை கொடுத்துள்ளார். முதல் படத்திலேயே ஷாருக்கான் -அட்லீ காம்பினேஷனில் இவர் நடிப்பில் வெளியான ஜவான் படம் சூப்பர் ஹிட்டடித்துள்ளது.

Actress Nayantharas new photo behind the screen released from the sets of Mannangatti since 1960 movie

நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நயன்தாரா அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் அடுத்ததாக அன்னபூரணி என்ற படம் டிசம்பர் 1ம் தேதி ரிலீசாகவுள்ளது.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். தமிழில் 20 ஆண்டுகளை கடந்த இவரது திரைப்பயணம் மிகவும் சுவாரஸ்யமானது. பல முன்னணி ஹீரோக்களுடன் முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் நயன்தாரா. ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம் என தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

அடுத்தடுத்த வெற்றிப் படங்கள்: நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களையும் எடுத்து அதில் மாஸ் காட்டி வருகிறார். இவரது கோலமாவு கோகிலா, மாயா, அறம், கனெக்ட் போன்ற படங்கள் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட். ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நயன்தாராவிற்கு அடுத்தப் படத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட நயன்தாராவிற்கு அந்தப் படம் மிகச்சிறப்பாக வெற்றியை கொடுத்தது.

பாலிவுட்டில் என்ட்ரி: தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தன்னுடைய நடிப்பில் ரசிகர்களை எப்போதுமே ஏமாற்றியதில்லை நயன்தாரா. அந்த வகையில் தமிழ் ரசிகர்கள் நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடி வருகின்றனர். தற்போது பாலிவுட்டிலும் ஜவான் படத்தின்மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார் நயன்தாரா. கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியான இந்தப் படத்தில் ஷாருக்கான் -அட்லீ கூட்டணியுடன் இணைந்தார் நயன்தாரா. இந்தப் படத்தின் வெற்றி நயன்தாராவிற்கு பாலிவுட்டிலும் கதவுகளை திறந்துள்ளது.

அன்னபூரணி படம்: அடுத்ததாக நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள அன்னபூரணி படம் வரும் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சச்சு, ரேணுகா, சத்யராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். நாயகிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டீசர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

இயக்குநர் அவதாரம் எடுக்கும் நயன்தாரா?: நடிப்பு, பிசினஸ், தயாரிப்பு என பன்முகம் காட்டி வரும் நயன்தாரா தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் கேமராவுடன் இருக்கும்படியான புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மண்ணாங்கட்டி Since 1960 படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் படம் இயக்குவது போல அவர் காணப்படுகிறார். மேலும் புதிய தொடக்கத்தை நம்புங்கள் என்று இந்த புகைப்படத்தை பகிர்ந்து கேப்ஷனில் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பாரா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X