Nayanthara: ஜவான் படத்தின் புதிய போஸ்டர்.. துப்பாக்கியுடன் மிரட்டும் நயன்தாரா!

மும்பை: பாலிவுட் பாட்ஷா -டைரக்டர் அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் படம் ஜவான். செப்டம்பரில் படம் ரிலீசாகவுள்ளது.

முன்னதாகவே ரிலீசாகவிருந்த இந்தப் படத்தின் ரிலீஸ் தவிர்க்க முடியாத காரணங்களால் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது.

ஜவான் படத்தில் ஷாருக்குடன் நயன்தாரா, பிரியா மணி, யோகிபாபு உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக இந்தப் படம் வெளியாகவுள்ளது.

Actress Nayantharas poster in Jawan movie released and attracts fans very much

ஜவான் படத்தில் நயன்தாரா போஸ்டர் வெளியீடு: நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பதான் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். படம் 1000 கோடிகளை தாண்டி வசூல் செய்தது. மேலும் சரிவில் இருந்த பாலிவுட் திரையுலகத்தை சரிவிலிருந்து மீட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 7ம் தேதி அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.

ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப் போன நிலையில், ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகியவண்ணம் உள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக இணைந்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை துவங்கியுள்ளார் நயன்தாரா. அவரது நடிப்பில் தமிழிலும் அடுத்தடுத்தப் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், அவரது ரசிகர்கள் ஜவான் படத்தை மிகவும் அதிகமாக எதிர்பார்த்துள்ளனர். இந்தப் படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நயன்தாராவின் புதிய போஸ்டரை ஜவான் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Actress Nayantharas poster in Jawan movie released and attracts fans very much

நயன்தாராவும் இந்த போஸ்டரை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கையில் துப்பாக்கியுடன் இந்தப் புகைப்படத்தில் மாஸ் காட்டியுள்ளார் நயன்தாரா. இந்தப் படம் அவரது கேரியரில் மிகச்சிறந்த படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் படத்திலேயே பாலிவுட் பாட்ஷா என்று பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கானுடன் இணைந்துள்ளார் நயன்தாரா. மேலும் அதிரடியான கேரக்டரும் அவருக்கு அமைந்துள்ளது.

இந்தப் படத்தின்மூலம் அடுத்தடுத்த பாலிவுட் படங்களிலும் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும் அதிகமான படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா. தொடர்ந்து தயாரிப்பிலும் விக்னேஷ் சிவனுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். விக்னேஷ் சிவனும் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அடுத்ததாக கமல் தயாரிப்பில் படம் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X