வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் நடிகை நஸ்ரியா.. வேற லெவலில் வைரலாகும் வீடியோ!

சென்னை: நடிகை நஸ்ரியா நஸீம் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

மலையாள தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக கேரியரை தொடங்கியவர் நஸ்ரியா நஸீம். சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.

மாட் டாட் என்ற மலையாள படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நஸ்ரியா. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நேரம் படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.

நடிகருடன் திருமணம்

நடிகருடன் திருமணம்

இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ராஜா ராணி, நய்யாணி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஃபகத் ஃபாஸிலை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

சமூக வலைதளங்களில்..

சமூக வலைதளங்களில்..

தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்த நஸ்ரியா, தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் மூலம் தெலுங்கு சினிமாவுக்கும் அறிமுகமாகிறார் நஸ்ரியா. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள நஸ்ரியா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

வாத்தி கம்மிங் பாடல்

வாத்தி கம்மிங் பாடல்

அந்த வகையில் தற்போது, தான் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார் நஸ்ரியா. அதாவது விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது தோழியுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார் நஸ்ரியா.

நீ கலக்கு செல்லம்

நீ கலக்கு செல்லம்

மேலும் இந்த வீடியோவுக்கு இப்போது வாத்திதான் ட்ரென்டிங் என்றும் ஏன் இருக்கக்கூடாது என்றும் கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நீ கலக்கு செல்லம் என கமெண்ட் கொடுத்துள்ளனர்.

நடனமாடும் வீடியோ


நஸ்ரியாவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். அண்மையில் ஒரு இந்தி பாடலுக்கு தனது தோழியுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X