உயிர் வாழ ஆக்ஸிஜன் இல்லாதபோது… ஜிஎஸ்டி வரியை ஏன் செலுத்தனும்… நடிகை நிலா பாய்ச்சல் !
மும்பை: நடிகை மீதான நிலா என்கிற மீரா சோப்ரா தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்,
அதில், கொரோனாவால் பத்து நாட்களில் இரண்டு குடும்ப உறுப்பினர்களை இழந்துவிட்டதாக கூறியுள்ளார்.
சுவாசிக்க மற்றும் வாழ ஒரு ஆக்ஸிஜனை பெறமுடியாதபோது 18% ஜிஎஸ்டி வரியை நான் ஏன் செலுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனா
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் கொரோனாவிலிருந்து மீள்வது மகிழ்ச்சி அளித்தாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது.

உருக்கமான பதிவு
அன்பே ஆருயிரே, ஜம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நிலா என்கிற மீரா சோப்ரா. தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவால் கடந்த 10 நாட்களில் மட்டுமே குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேரை பறிகொடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

கொடூரமான மரணம்
ஏப்ரல் 29 ஆம் தேதி எனது எனது நெருங்கிய ஒருவரை இழந்தேன். அவருக்கு ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் இறந்தார். மேலும் அவருக்கு #ICUBed உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. படுக்கை கிடைத்த நேரத்தில், அவரது நுரையீரல் செயல்படவில்லை. இது ஒரு கொடூரமான மரணம் அல்லது கொலை? என்று பதிவிட்டுள்ளார்.

ஏன் செலுத்த வேண்டும்
மேலும், மே 5 ஆம் தேதி, கொரோனா என்ற பயங்கரமான நோயால் இன்னொரு உறவினரை இழந்துவிட்டதாக பகிர்ந்துள்ளார். கடந்த 1 வாரத்தில் எனது குடும்பத்தில் 2 #CovidDeaths ஐ பார்த்தேன். தேவைப்படும்போது எந்த மருத்துவ உதவியையும் பெற முடியாவிட்டால் "நான் மருத்துவமனையில் ஒரு படுக்கையையோ அல்லது சுவாசிக்க மற்றும் வாழ ஒரு ஆக்ஸிஜனையோ பெறமுடியாதபோது 18% ஜிஎஸ்டி வரியை நான் ஏன் செலுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











