Neelima Rani - ஒரு மாதத்திற்கு எத்தனை முறை.. அதில் பிடித்தது எது.. மோசமான கேள்விக்கு நீலிமாவின் அதிரடி பதில்
சென்னை: Neelima Rani (நீலிமா ராணி) தன்னிடம் மோசமான கேள்வி கேட்ட ரசிகர் ஒருவருக்கு நடிகை நீலிமா ராணி அதிரடியாக பதிலளித்திருக்கிறார்.
கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதனையடுத்து ஒரு சில தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே தோன்றி நடித்துவந்தார். இப்படிப்பட்ட சூழலில் சின்னத்திரையிலும் அறிமுகமானார் நீலிமா ராணி. சின்னத்திரை அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.

நெடுந்தொடர்கள்: தொடர்ந்து சின்னத்திரையில் பல நெடுந்தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார் நீலிமா. அப்படி அவர் நடித்த ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவை. முக்கியமாக நீலிமா ராணிக்கு மெட்டி ஒலியும், கோலங்கள் நெடுந்தொடரும் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.
தமிழ் திரைப்படங்களில்: ஒருபக்கம் சீரியல்களில் பிஸியாக நடித்துவந்த அவர் மறுபக்கம் திரைப்படங்களிலும் தலை காண்பிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல ஆகிய படங்களில் அவர் நடிப்பதற்கான ஓரளவு ஸ்பேஸ் கிடைத்தது. கடைசியாக அவர் ஆகஸ்ட் 16 1947 படத்தில் கௌதம் கார்த்திக்கிறகு அம்மாவாக நடித்தார். படத்தில் சிறிது நேரமே வந்தாலும் அவரது நடிப்பு கவனிக்கும்படி அமைந்தது குறிப்பிடத்தக்கது.
குடும்பம்: நிலீமா ராணி காதலித்து திருமணம் செய்துகொண்டவர். அவருக்கு மொத்தம் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் பெயர் இசைவாணன். இசைவாணன் திரைத்துறையில் இல்லாவிட்டாலும் திரைப்படம் தயாரிக்க ஆசைப்பட்டார். இதற்காக நீலிமா ராணியும், அவரும் இணைந்து ஒரு படத்தை தயாரித்தனர். ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நின்றது. அதன் காரணமாக கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபாய் கடன் ஆனது. அதை சமீபத்தில்தான் அடைத்து முடித்தோம் என ஒரு பேட்டியில்கூட நீலிமா தெரிவித்திருந்தார்.
ரசிகரின் மோசமான கேள்வி: நீலிமா ராணி சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர். அந்தவகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடிக்கொண்டிருந்தார் அவர். அப்போது ரசிகர் ஒருவர், 'ஒரு மாதத்துக்கு எத்தனை முறை உடலுறவு கொள்வீர்கள். பிடித்த நிலை எது? என கேட்டிருந்தார். இதனால் செம காண்டான நீலிமா, "இந்த முட்டாள்த்தனமான கேள்விக்கு எப்படி பதில் சொல்வது" என காட்டமாக ரிப்ளை செய்தார். சமீபகாலமாக நடிகைகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடும்போது இதுபோன்ற தரம் தாழ்ந்த கேள்விகள் கேட்கப்படுவது அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











