Don't Miss!
- News
பக்காமூவ்.. மோடி, அமித்ஷாவின் நம்பிக்கை.. கர்நாடகா பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான்..காரணமே இதுதான்
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆபாசமான கமெண்ட்.. நீங்களெல்லாம் மனுஷங்களா?நொந்து போன நீலிமா ராணி!
சென்னை : இணையத்தில் ஆக்வாக இருக்கும் நடிகை நீலிமா ராணி, இன்ஸ்டாகிராமில் வரும் தொடர்ந்து வரும் ஆபாசமான கமெண்டுகளால் மனம் நொந்து போய் உள்ளார்
கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை நீலிமா ராணி. பாண்டவர் பூமி, அன்பு ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
அன்று முதல் இன்று வரை பலத் திரைப்படங்களில் சீரியல்களிலும் நடித்துள்ளார். மெட்டி ஒலி, கோலங்கள்,தென்றல்,வாணி ராணி, தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள் போன்ற தொடர்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன.
காந்தியை விமர்சித்தவன் நான்..மன்னிப்பு கூறவே ஹே ராம் படம் எடுத்தேன்..மனம் திறந்த கமல்ஹாசன்!

நடிகை நீலிமா ராணி
நடிகை நீலிமா ராணியை தெரியாதவர்களே இருக்க முடியாது, அந்த அளவுக்கு பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்து விட்டார். நீலிமா ராணியின் திரைப்பயணமே வெள்ளித்திரையாக இருந்தாலும், இளம் பருவத்தில் திரைப்படங்களில் பெரிதாக வாய்ப்பு இல்லை.

ஏராளமான படங்களில
இதையடுத்து, கார்த்திக் நடித்த நான் மகான் அல்ல படத்தில், கார்த்தியின் தோழியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு குற்றம் 23, குட்டி,முரண், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும், வாலிப ராஜா, மன்னர் வகைறா, சக்ரா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதே அழகுடன்
நடிகை நீலிமா ராணி கடந்த 2008ஆம் ஆண்டு இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கடந்து செப்டம்பர் மாதம் இரண்டாவது பெண்குழந்தை பிறந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும், இன்னும் அதே இளமையுடனே இருக்கிறார் நீலிமா ராணி. தனக்கு சொந்தமான யூடியூப் சேனலில்,ஃபிட்னெஸ் குறித்தும் அழகு பராமரிப்பு குறித்தும் அவ்வப்போது டிப்ஸ் கொடுத்து வருகிறார்.

ஆபாச கமெண்ட்
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நீலிமா ராணி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில்,தனக்கு ஆபாசமாகவும் கேவலமாகவும் இத்தனை பேர் டார்ச்சர் செய்ததாகவும் அவர்களை பிளாக் செய்துள்ளதை வீடியோவாக ஒரு பதிவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீங்களெல்லாம் மனுஷங்களா? கேட்டு வருகின்றனர்.