இனிமே முடியாதுப்பா… நடிப்பை ஓரம்கட்டி புதிய தொழிலை தொடங்கிய நடிகை!
சென்னை: நடிகை நீலிமா ராணி நடிப்புக்கு முழுக்கு போட்டு புதிய தொழிலை தொடங்கி உள்ளார்.
தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நீலிமா ராணி, தொடர்ந்து பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

மேலும், சின்னத்திரையில் மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள், போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.
காதல் திருமணம்: நீலிமா தனது 21 வயதில் அப்போது துணை இயக்குனராக இருந்த இசைவாணன் என்பவரை காதலித்தார். இருவருக்கும் 10 வயது வித்தியாசம் இருந்தால், நீலிமாவின் குடும்பத்தினர் அவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. ஆனால், இசைவாணன் பற்றிவீட்டில் எடுத்துக்கூறி பின் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

ஆகஸ்ட் 16 1947 படத்தில்: நடிகை நீலிமா ராணி அண்மையில் வெளியான ஆகஸ்ட் 16 1947 என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் நடித்த காட்சி வெறும் ஐந்து நிமிடமே வந்தாலும், அந்த கேரக்டரில் நடித்ததற்காக அனைவரும் இவரை பாராட்டினார்கள். இந்த படத்தில் நீலிமா, கௌதம் கார்த்திக்கின் அம்மாவாக நடித்திருந்தார்.
தாத்தாவா, அப்பாவா: அண்மையில் யூடியூப் சேனல் பேட்டி கொடுத்திருந்த நீலிமா ராணி என் கணவரின் புகைப்படத்தை பார்த்து, தாத்தாவா, அப்பாவா, தாத்தாக்கூட வெளியில் போறீங்களா என்று கேட்கிறார்கள். என் கணவர் சால்ட் அண்ட் பெப்பர் தான், மற்றவர்களுக்காக 'டை' அடித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தலாடியாக பதில் அளித்திருந்தார்.

புதிய தொழில்: இந்நிலையில் நடிகை நீலிமா ராணி, சென்னையில் உள்ள ஆர். கே. சாலையில் 'நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்' எனும் அழகு நிலையத்தை தொடங்கியுள்ளார். இந்த அழகு நிலையத்தை பாடகர் எஸ்.பி சரண் திறந்து வைத்தார். மேலும், தொழிலதிபர்கள் இளங்கோவன், வீணா குமரவேல் மற்றும் சி. கே. குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு புதிதாக தொடங்கி உள்ள தொழில் வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











