ஏ.. அம்மாடி.. எவ்ளோ உயரத்துக்கு தூக்குறது.. நீத்து சந்திரா பண்ணிருக்க வேலைய பாருங்க மக்களே!
சென்னை: நடிகை நீத்து சந்திரா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.
பாலிவுட் நடிகையான நீத்து சந்திரா தெலுங்கில் வெளியான விஷ்ணு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து இந்தி, தமிழ், கன்னடம், போஜ்பூரி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் யாவரும் நலம் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நினைவுப்படுத்தும் நீத்து
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாததால் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது போட்டோக்களை போட்டு நினைவுப்படுத்தி வருகிறார் நீத்து சந்திரா.

தலைக்கு மேல்
அந்த வகையில் நின்ற நிலையில் காலை தலைக்கு மேல் தூக்கியப்படி நீத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
A post shared by Neetu N Chandra (@neetunchandra) on
முயற்சித்தீர்களா?
காலில் சிவப்பு நிற ஹீல்ஸ் செப்பல் அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த அவர் பதிவில், நான் இந்த வழியில் நீட்ட வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் எப்போதாவது இதுபோன்று முயற்சித்தீர்களா? என்னுடைய ஹீல்ஸை இப்படி வைப்பது வசதியாக இருக்கிறது.
தவறாக நினைக்காதீர்கள்
ஆக்கப்பூர்வமாகவும் தனித்துவமாகவும் இருங்கள். உங்கள் சொந்த பாதையை உருவாக்குங்கள் மக்கள் உங்களைப் பற்றி மோசமாகப் பேசும்போது, அவர்கள் உங்களைப் பற்றி நினைத்து முதலீடு செய்யும் விலைமதிப்பற்ற நேரத்தை நினைத்துப் பாருங்கள், அவர்களை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்..

பிளாக் செய்யுங்கள்
அவர்களை பிளாக் செய்யுங்கள் அல்லது சிரித்துக்கொண்டே கடந்துவிடுங்கள். நான் பிளாக் செய்து விடுவேன். நான் கடினமாக உழைக்கிறேன், நான் வெவ்வேறு துறைகளில் ஒரு முக்கியமான கலைஞன்! என்னை ஊக்குவித்ததற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

ஒரு ரைடு போலாமா
இதேபோல் கறுப்பு நிற டீப் நெக் கவர்ச்சி உடையில் உள்ள நீத்து சந்திரா, அருகில் உள்ள சைக்கிளை பார்த்து ஒரு ரைடு போலாமா என்பது போல் ரியாக்ட் செய்கிறார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











