வாடி வாடி நாட்டுக்கட்ட… இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடிய நடிகை யார் தெரியுமா !
சென்னை : தி பேமிலி மேன் வெப் தொடரில் உளவுத்துறை அதிகாரியாக நடித்த மனோஜ் பாஜ்பாயின் மனைவி நேகா அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு நடிகையாம்.
அவர் பிரபுதேவாவுடன் அள்ளித்தந்த வானம் திரைப்படத்தில் நடித்துள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவியதை அடுத்து ரசிகர்கள் அட அவங்கள இவங்க என்று கேட்டு வருகின்றனர்.

வலுக்கும் எதிர்ப்பு
சமந்தா முதன்முறையாக இந்தியில் நடித்துள்ள தி பேமிலி மேன் 2 வெப் தொடர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடர் தமிழர்களையும், ஈழப் போராளிகளையும் தவறாக சித்தரித்துள்ளதாக கூறி அந்த தொடரை தடை செய்ய வேண்டும் என தமிழகத்தில் எதிர்ப்பு குரல் வலுத்து வருகிறது. மனோஜ் பாஜ்பாய் பிரியா மணி, சமந்தா உள்ளிட்டோரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நேகா
இந்நிலையில் இணையத்தில் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தி பேமிலி மேன் வெப் தொடரில் உளவுத்துறை அதிகாரியாக நடித்த மனோஜ் பாஜ்பாயின் மனைவி நேகா ஒரு நடிகை என்பதும் அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

வாடி வாடி நாட்டுக்கட்ட
2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் அள்ளித்தந்த வானம். இந்த திரைப்படத்தை விஜி இயக்கி இருந்தார். இதில், பிரபுதேவா, லைலா, பிரகாஷ் ராஜ் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்ற வாடி வாடி நாட்டுக்கட்ட பாடலுக்கு நடனமாடியது மனோஜ் பாஜ்பாயின் மனைவி நேகா தானாம்.

நடிக்கவில்லை
மேலும் அவர் இந்தி,கன்னடம் என பல படங்களில் நடித்துள்ளார். எனினும் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டதாகவும், மனோஜ் பாஜ்பாயை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மனோஜ் பாஜ்பாய் நேகா தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











