செல்லக்குட்டி… தங்கச்சியுடன் கொஞ்சி விளையாடும் நேகா மேனன்… வைரல் பிக்ஸ் !
சென்னை : சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நேகா மேனன்.
இவர் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் நடித்த ஜாக்சன் துரை திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், ஆர்யாவுடன் யட்சன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது இவர், தங்கச்சி பாப்பாவுக்கு முத்தம் கொடுப்பது போல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக
பைரவி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நேகா மேனன். இந்த சீரியலை அடுத்து அகல் விளக்கு, பிரியமானவள் என பல தொடர்களில் நடித்தார். நேகா பல தொடர்களில் நடித்தாலும் இவருக்கு பெயர் வாங்கித் தந்த தொடர் ராதிகா சரத்குமார் இயக்கிய வாணி ராணி தொடர். இதில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பாக்கியலட்சுமி
குழந்தை நட்சத்திரமாக இருந்த நேகா வாணி ராணி தொடர் முடிவதற்குள் நன்கு வளர்ந்து ஹீரோயின் போல ஆகிவிட்டார். தற்போது இவர், சித்தி 2, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார்.

சுறுசுறுப்பாக
சமூக வலைத்தளத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் கதாநாயகிகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் நடத்தி அதை வைரலாக்கி வருகிறார். குண்டு குண்டுனு இருக்கும் இவரை இணையத்தில் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்

கொஞ்சிவிளையாடும் நேகா
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தாய் கர்ப்பமாக இருந்ததாகவும், அவருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் மகிழ்ச்சியாக செய்தியை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். தற்போது இவர், தங்கச்சி பாப்பாவுக்கு முத்தம் கொடுப்பது போல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் குட்டி பாப்பாவுக்கு சாஹித்தி என்று பெயர் வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா நேரத்தில் ஷூட்டிங் இல்லாததால் கவலையில் இருந்த நேகா குட்டி பாப்பாவுடன் விளையாடி நேரத்தை செலவழித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











