சரக்கு.. நொறுக்ஸ் என பக்கா செட்டப்புடன் டிவி பார்க்கும் பிரபல நடிகை.. டிரெஸ்தான் கொஞ்சம் கம்மி!
சென்னை: பிரபல நடிகையான நேகா ஷர்மா அரைகுறை உடையில் சரக்கு நொறுக்கு தீனி என ஃபுல் செட்டப்புடன் டிவி பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை நேகா ஷர்மா பீகாரின் போஹல்பூரை பூர்வீகமாக கொண்டவர். மாடலான இவர் தெலுங்கில் 2007ஆம் ஆண்டு வெளியான சிறுத்த படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
ஆனாலும் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2009ஆம் ஆண்டு குரடு என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.

பாலிவுட்டில் பிஸி
இதனை தொடர்ந்து 2010ஆம் ஆண்டு குரூக் என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவுக்கு அறிமுகமானார் நேகா ஷர்மா. ஆனால் அதிலும் முதல் 2 ஆண்டுகள் இருக்கும் இடம் தெரியாமலே இருந்தார். 2012ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க பாலிவுட்டில் பிஸியான நடிகையானார் நேகா ஷர்மா.

இரண்டு தங்கைகள்
சோலோ என்ற தமிழ் படத்தின் மூலம் 2017ல் கோலிவுட் சினிமாவுக்கும் என்ட்ரி கொடுத்தார். நடிகை நேகா ஷர்மாவுக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். ஆயிஷா ஷர்மா மற்றும் ரீத்திகா ஷர்மா. ஆயிஷா ஷர்மா சினிமாவில் நடித்து வருகிறார்.
வீடியோக்கள்
சமூக வலைதங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நேகா ஷர்மா, அவ்வப்போது தனது சகோதரிகளுடன் இருக்கும் போட்டோக்கள் வீடியோக்கள் என ஷேர் செய்து வருகிறார். அதோடு தனது வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை அவ்வப்போது கிறங்கடித்து வருகிறார்.

கிளாஸில் சரக்கு
இந்நிலையில் வீட்டிலேயே தியேட்டர் செட்டப்போடு டிவி பார்க்கிறார் நடிகை நேகா ஷர்மா. டிவியை ஆன் செய்த கையோட அரைகுறை உடையில் துள்ளிக்குதித்து எகிறி சேரில் அமர்கிறார் நடிகை நேகா ஷர்மா. மேலும் தனது தன்னுடைய டேபிளில் கிளாஸில் சரக்கு ஊற்றி வைத்துள்ளார்.

செம கொண்டாட்டம்
கூடவே நொறுக்குத் தீனிகளையும் வைத்து பக்காவாக ரெடியாகிறார். இதில் அவரது முழு தொடையும் அப்படியே தெரிகிறது. நேகா ஷர்மாவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வீக்கென்ட்டை செமயாக கொண்டாடுகிறீர்கள் போலயே என கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











