பிரபல நடிகை நீலிமா ராணி பங்கேற்கும் மேஜிக் பெண்கள் 2.0.. நம்ம சென்னையில்.. எப்போது தெரியுமா?

சென்னை; உழைக்கும் பெண்கள் தொடங்கி வீட்டை பராமரிக்கும் குடும்பத் தலைவிகள் வரை அனைவரின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு உதவிடவும் ஊக்குவிக்கவும் மேஜிக் தமிழ் அமைப்பு மேஜிக் பெண்கள் 2.0 என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் 29ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெண்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக பல்வேறு விஷயங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் திரைபட மற்றும் சின்னத்திரை நடிகை நீலிமா ராணி கலந்து கொள்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் மற்றும் மருத்துவர் சுதா, தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் சுதா ராமன் மற்றும் டிக்கெட் 9ஐச் சேர்ந்த அதன் சி.இ.ஓ யாழினி சண்முகம் என பலர் கலந்து கொள்ளவுள்ளார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி வரும் 29ஆம் தேதி அதாவது வரும் சனிக்கிழமை மாலை 5. 30 மணி முதல் இரவு 8.30 மணி வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.எம். ஏவில் நடைபெறவுள்ளது.

மேஜிக் பெண்கள்: மேஜிக் 20 தமிழ் ஏற்பாடு செய்துள்ள இந்த மேஜிக் பெண்கள் 2.0 நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக "தாக்கத்தை ஏற்படுத்தும் விவாதங்கள், ஈடுபாட்டுடன் கூடிய குழு அமர்வுகள் மற்றும் சிந்தனையைத் தூண்டும் முக்கிய உரைகள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பான ஊக்குவிக்கும் நிகழ்ச்சியைத் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறமையான பெண் தலைவர்களை ஒன்றிணைத்து மனநலம், பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில் முனைவு குறித்த விவாதங்களும் உரைகளும் நிகழ்த்தபடவுள்ளது.

Actress Nelima Rani attend as chif Guset Magic Pengal 2 0 Presented by Magic 20 Tamil Event

வாதம் மற்றும் உரையாடல்: தொழில் முனைவோர்களாக இருக்கும் பெண்கள் மற்றும் பெண் சாதனையாளர்கள் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கலந்துரையாடலில் திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை நீலிமா ராணி கலந்து கொள்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் மற்றும் மருத்துவர் சுதா, தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் சுதா ராமன் மற்றும் டிக்கெட் 9 ஐச் சேர்ந்த அதன் சி.இ.ஓ யாழினி சண்முகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். அதேபோல், இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் விவாத நிகழ்ச்சியில் SPIKRA நிறுவனத்தின் சி.இ.ஓ ராதா ரங்காச்சாரி நடுவராக இருக்க அதில் ஸ்ரீராம் கேபிடல் பிரைவேட். லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுபாஸ்ரீ ஸ்ரீராம் விவாதம் நடத்த உள்ளார்.

முன் பதிவு: அதேபோல் பெண்கள் மனநலம் மற்றும் அவர்களின் நல்வாழ்வு என்ற தலைப்பில், தொழில் முனைவோர் மற்றும் மனநல பயிற்சியாளரான மாலிகா ரவிக்குமார் உரையாற்றவுள்ளார். அதேபோல் பெண்கள் தங்களுக்கான நிதியை எவ்வாறு கையாள வேண்டும் என்ற தலைப்பில் பிரைம் இன்வெஸ்டர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் வித்யா பாலா,உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைக்கும் பெண்கள் டிக்கெட் 9 தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு ஒருவருக்கு ரூபாய் 1000 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இந்த தகவல் தற்போது தொழில் முனைய முயற்சி செய்யும் பெண்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. மேலும் வரவேற்பையும் பெற்றுள்ளது. டிக்கெட் முன் பதிவுக்கு இந்த லின்க்கை க்ளிக் செய்யவும்! https://www.theticket9.com/event/magic-pengal-2-0

Take a Poll

More from Filmibeat

Read more about: actress event tamil cinema kollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X