'அந்த' டிசைனில் இருந்த கேக்.. ஆபாசமாக பிறந்தநாளை கொண்டாடிய நாகினி நடிகை.. திட்டி தீர்த்த ரசிகர்கள்!

மும்பை: ஆண் உறுப்பு டிஸைனில் வடிவமைக்கப்பட்ட கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகையை ரசிகர்கள் கண்டப்படி கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிரபல டிவி நடிகை நியா ஷர்மா. நேகா ஷர்மா என்ற தனது பெயரை சினிமாவுக்காக நியா ஷர்மா என மாற்றிக் கொண்டார்.

2010ஆம் ஆண்டு வெளியான காளி - ஏக் அக்னிபரிக்ஷா என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

வெப் சீரிஸ்கள்

வெப் சீரிஸ்கள்

இந்தி சின்னத்திரையில் முன்னணி நடிகையாக உள்ள நியா ஷர்மா, டிவிஸ்ட்டடு, ஜமாய் ராஜா 2.0, டிவிஸ்ட்டடு சீசன் 2 ஆகிய வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். சின்னத் திரையை பொறுத்தவரை பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் நியா ஷர்மா.

30வது பிறந்த நாள்

30வது பிறந்த நாள்

இந்நிலையில் நடிகை நியா ஷர்மா நேற்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கொண்டாட்ட வீடியோக்கள்

கொண்டாட்ட வீடியோக்கள்

ஆஷா நேகி, குஷால் டாண்டன் உள்ளிட்ட பல சின்னத்திரை நண்பர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து செய்திகளை அனுப்பினர். நாகின் நடிகை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

கேக் டிசைன்

கேக் டிசைன்

அதில் ஒரு வீடியோவில் ஆணுறுப்பு டிசைனில் கேக் உள்ளது. இந்தக் கேக்கை அவரது நண்பர்கள அர்ஜுன் பிஜ்லானி மற்றும் நண்பர்கள் ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இஷ்க் தன்ஹா இணை நடிகர் அர்ஜுன் பிஜ்லானி, ரெய்னா பண்டிட் மற்றும் பிற சகாக்களும் பங்கேற்றிருந்தனர்.

விளாசிய நெட்டிசன்ஸ்

விளாசிய நெட்டிசன்ஸ்

இந்நிலையில் நியா ஷர்மா ஷேர் செய்த இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், கடுமையாக விளாசியுள்ளனர். பிறந்த நாள் கேக் கேவலமாக உள்ளது என்றும், உங்களின் ரசனை ரொம்ப மோசம் என்றும் திட்டி தீர்த்துள்ளனர்.

ஆபாசம் நிறைந்த வீடியோ

ஆபாசம் நிறைந்த வீடியோ

இன்னும் சிலர் எண்ணங்கள் கீழ்த்தரமாக உள்ளவர்களால் மட்டுமே இதுபோன்று சிந்திக்க முடியும் என்றும் விளாசியுள்ளனர். மேலும் இவ்வளவு ஆபாசம் நிறைந்த இந்த வீடியோவை நீங்கள் இன்ஸ்டாவில் ஷேர் செய்திருக்க கூடாது என்றும் இதுபோன்ற செயல்பாடுகளால் உங்கள் மீதான மரியாதையை இழந்து விடாதீர்கள் என்றும் அட்வைஸ் செய்துள்ளனர்.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஷாம்பியன் ஓபன் செய்து நண்பர்களுடன் குதூகலித்த
தையும் ஷேர் செய்துள்ளார் நியா ஷர்மா. நியா ஷர்மாவின் இந்த மோசமான பிறந்தநாள் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X