நீங்களே மகிழ்ச்சி..பேசி முடித்த பின் காதலில் விழுந்த பெரிய குடும்பத்து நடிகை..டிசம்பரில் திருமணம்
சென்னை: திருமணம் பேசி முடித்தபின், வருங்கால கணவருடன் காதலில் விழுந்திருக்கிறார் பெரிய குடும்பத்து, நடிகை
தமிழில், 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் மூலம் அறிமுகமானவர், தெலுங்கு நடிகை நிஹரிகா கொனிடெலா.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடித்திருந்தனர். நிஹரிகா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாவுவின் மகள்.

சைரா நரசிம்ம ரெட்டி
நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் நிஹரிஹாவை பெரிய குடும்பத்து நடிகை என்கிறார்கள். கடந்த 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான, ஒக்க மனசு மூலம் சினிமாவில் அறிமுகமான நிஹரிகா, ஹேப்பி வெட்டிங், சைரா நரசிம்ம ரெட்டி படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் வெப்சீரிஸ்களை தயாரித்துள்ளார்

மாப்பிள்ளை பார்த்தனர்
இவர், இப்போது தமிழில் அசோக் செல்வன் ஜோடியாக நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதினி இயக்குகிறார். கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கிறது. லாக்டவுன் முடிந்ததும் இதன் ஷுட்டிங் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் நிஹரிகாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக அவர் தந்தை நாகபாபு தெரிவித்திருந்தார். அதன்படி அவருக்கு குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.

நிச்சயதார்த்தம்
இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்த நிஹரிகா, வருங்கால கணவரின் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். அந்த இளைஞர், ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா என்பதை நிஹரிகா தெரிவித்து இருந்தார். இது பெற்றோர்களால் பேசி முடிக்கப்பட்டுள்ள திருமணம். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது.

மகிழ்ச்சியான இடம்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சைதன்யாவுக்கு பிறந்த நாள். இதையடுத்து அவருக்கு வாழ்த்து சொன்ன, நிஹரிகா, அறை முழுவதும் ஒளிரச் செய்யும் புன்னகை, வீட்டில் இருப்பது போன்ற உணர்வை தரும் அரவணைப்புகள். நீங்கள்தான் எனது மகிழ்ச்சியான இடம் சைதன்யா. எல்லாவற்றிலும் சிறந்ததை பெற தகுதியானவர் நீங்கள். வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

டிசம்பரில் திருமணம்
திருமணம் நிச்சயம் செய்த பிறகு இருவரும் காதலிக்கத் தொடங்கி இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறி வருகின்றனர். திருமணம் டிசம்பர் மாதம் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான வேலைகளை நிஹரிகாவின் குடும்பத்தினர் பரபரப்பாகத் தொடங்கி உள்ளனர். டோலிவுட்டுக்கு இது திருமண காலம். நிகில் சித்தார்த்தா, நிதின் திருமணம் சமீபத்தில் நடந்தது. ஆகஸ்ட் மாதம் ராணா திருமணம் நடக்க உள்ளது. அடுத்து நிஹரிகா திருமணம் நடக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications











