Just In
- 9 min ago
தோத்துட்டேன் மச்சான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போனில் உரையாடிய சோமசேகர்.. வைரலாகும் வீடியோ!
- 22 min ago
பேண்டை கழட்டி 'அதை' காட்டினார்.. பிரபல இயக்குநர் மீது யுனிவர்சிட்டி பட நடிகை பகீர் புகார்!
- 1 hr ago
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி!
- 2 hrs ago
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
Don't Miss!
- Lifestyle
இந்த டீ நீங்க தூங்கும்போதுகூட உங்க கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுமாம்...!
- Sports
டெஸ்ட் தரவரிசை.... 4வது இடத்துக்கு இறங்கிய கேப்டன்... முதல் 50 இடங்களில் 8 இந்திய வீரர்கள்!
- News
ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாளை தரிசித்த கையோடு ஸ்டாலினுக்கு எதிராக அனலை கக்கிய முதல்வர்
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Automobiles
வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!
- Finance
தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனா பாதிப்பு.. சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!
கண்ணூர்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை மரணமடைந்தார்.
கொரோனா காரணமாக உலக நாடுகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
உலகில் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது.

கொஞ்சம் கட்டுப்பாடு
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல், கட்டுப்பாட்டுக்குள் கொஞ்சம் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக, கொரோனா பரவல் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் மக்களிடம் பயம் போகவில்லை.

நடிகையின் தந்தை
பாதிக்கப்படுவோடும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, இந்த கொரோனா தொற்றுக்கு பிரபல நடிகையின் தந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபல மலையாள நடிகை நிகிதா விமல். இவர் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

கிடாரி நாயகி
தமிழில், சசிகுமார், பிரபு நடித்த, வெற்றிவேல், கிடாரி, பஞ்சுமிட்டாய், கார்த்தியின் தம்பி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது சிபிராஜ் ஜோடியாக ரங்கா என்ற படத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் தந்தை பவித்ரன்.

திடீர் மாரடைப்பு
அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கண்ணூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 61.

நிகிலா, அகிலா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய துணை செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும் இருந்தவர், பவித்ரன். அவர் மறைவை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. மறைந்த பவித்ரனுக்கு விமலாதேவி என்ற மனைவியும் நடிகை நிகிலா, அகிலா ஆகிய மகள்களும் உள்ளனர்.