க்யூட்னஸ் ஓவர் லோடட்.. நிக்கி கல்ராணியின் கலக்கல் போட்டோவை பார்த்து உருகும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை நிக்கி கல்ராணியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டை பார்த்த ரசிகர்கள் க்யூட்னஸ் ஓவர் லோடட் என உருகி வருகின்றனர்.
கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை நிக்கி கல்ராணி. 1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த நிக்கி கல்ராணிக்கு டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கிடைத்தது.

கலகலப்பு 2
தொடர்ந்து தமிழில் யாகாவராயினும் நாகாக்க, கோ 2, கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2 சார்லி சாப்லின் 2, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இடியட் படம்
அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் கீ. தற்போது இடியட் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஜவம்சம், வட்டம் ஆகிய படங்களின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

லெஹாங்கா
இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி சக நடிகைகளை போல் போட்டோ ஷூட்டில் குதித்துள்ளார். அண்மையில் லெஹாங்காவில் அவர் நடத்திய போட்டோ ஷூட்டுக்கள் வைரலானது.

தேவதையை போல்
தற்போது வேலைப்பாடுகள் நிறைந்த லாங் கவுனை அணிந்து தேவதையை போல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். புல் வெளியில் பழங்கள் சோலைகள் என நிரப்பி அமர்ந்துள்ளார்.

க்யூட்னஸ் ஓவர்லோடட்
பின்னால் செடிகள் நிறைந்திருக்க இடுப்பில் கையை வைத்து நின்றப்படி ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார் நிக்கி கல்ராணி. நிக்கி கல்ராணியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் க்யூட்னஸ் ஓவர்லோடட் என புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











