அர்ஜுன் வயிற்றில் பாக்ஸிங் செய்து பழகும் நிக்கி கல்ராணி.. இது வேற லெவல் சண்டை!

சென்னை: தமிழ்,மலையாளம், தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக உள்ளவர் நிக்கிகல்ராணி

தமிழ் சினிமாவிற்கு டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமான இவர் இப்பொழுது இடியட் என்ற ஹாரர் படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் அர்ஜூனின் வயிற்றில் பாக்ஸிங் செய்து பழகும் க்யூட்டான சண்டை வீடியோவை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

 தொடர்ந்து வெற்றி படங்கள்

தொடர்ந்து வெற்றி படங்கள்

நடிகை நிக்கி கல்ராணி தமிழில் அறிமுகமாகி நடித்த பல திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமான டார்லிங் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அதைத்தொடர்ந்து யாகாவராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சார்லி சாப்ளின் 2, பக்கா, போய் 2, மொட்ட சிவா கெட்ட சிவா,மரகத நாணயம் என இவரது நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்றது

 இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது

இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது

குறிப்பாக நடிகர் ஆதியுடன் இணைந்து யாகாவராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது மூன்றாவது முறையாக ஷிவுடு என்ற படத்தில் மீண்டும் ஜோடியாக இணைந்துள்ளது. தொடர்ந்து இருவரும் ஜோடியாக நடிப்பதால் இருவரும் காதலிப்பதாகவும் சினிமாவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

 காமெடியாக ட்ரீட்

காமெடியாக ட்ரீட்

தில்லுக்கு துட்டு, தில்லுக்குதுட்டு பாகம்-2 என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ராம் பாலாவின் இயக்கத்தில் அடுத்ததாக காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இடியட் படத்தில் மிர்ச்சி சிவா உடன் இணைந்து நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இடியட் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது விரைவில் ரிலீசாக உள்ள இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மற்றுமொரு காமெடியாக ட்ரீட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அர்ஜூனின் வயிற்றில் பாக்சிங் செய்து விளையாடும்

அர்ஜூனின் வயிற்றில் பாக்சிங் செய்து விளையாடும்

சமூக வலைதளங்களில் அடிக்கடி க்யூட்டான புகைப் படங்களைப் பதிவேற்றி லைக்குகளை அள்ளும் நிக்கி கல்ராணி இப்பொழுது அர்ஜுனுடன் படப்பிடிப்பு தளத்தில் க்யூட்டாக சண்டை போட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் அர்ஜூனின் வயிற்றில் பாக்சிங் செய்து விளையாடும் நிக்கிகல்ராணி அசராமல் நிற்கும் அர்ஜுன் என பார்க்கவே செம க்யூட்டாக இருக்கும் இந்த வீடியோ இப்பொழுது சமூகவலைதளத்தில் வைரலாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X