எவ்ளோ மிஸ் பண்றேன்னு உனக்கு தெரியாது.. இறந்த அண்ணனுக்கு சகோதரர் தின வாழ்த்து கூறி கலங்கிய நடிகை!

சென்னை: பிரபல நடிகையான நிக்கி தம்போலி மறைந்த தனது அண்ணணுக்கு சகோதரர் தின வாழ்த்து கூறியுள்ள பதிவு கலங்க வைத்துள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா 3. இந்தப் படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

நிக்கி தம்போலி

நிக்கி தம்போலி

இந்நிலையில் இப்படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்த நிக்கி தம்போலி கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவந்தார் நிக்கி தம்போலி.

சகோதரர் மரணம்

சகோதரர் மரணம்

இதன் பலனாக கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டார் நிக்கி தம்போலி. ஆனால் அவரது சகோதரரான ஜட்டின் கொரோனா தொற்றால் மரணமடைந்தார். 29 வயதான ஜட்டின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சகோதரர் தினம்

சகோதரர் தினம்

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அடுத்த 2 நாட்களிலேயே கட்ரான் கே கில்லாடி சீசன் 11 நிகழ்ச்சிக்காக நிக்கி தம்போலி கேப் டவுன் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் சகோதரர் தினத்தை முன்னிட்டு நிக்கி தம்போலி தனது சகோதரருடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உன்னை பார்க்க முடியாது

உன்னை பார்க்க முடியாது

மேலும் ஹேப்பி பிரதர்ஸ் டே.. நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணுகிறேன் என்று உனக்கு தெரியாது. நீ எப்போதும் என்னைச் சுற்றியிருக்கிறாய். என்னால் உன்னை உணர முடிகிறது, ஆனால் சோகமான பகுதி உன்னை பார்க்க முடியாது. " என குறிப்பிட்டுள்ளார்.

சிகிச்சை பலனின்றி மரணம்

சிகிச்சை பலனின்றி மரணம்

நிக்கி தம்போலி தனது சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பூஜைகள் எல்லாம் மேற்கொண்டார். ஆனால் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த ஜட்டின் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X