Nila - குளியல் காட்சியில் நடிக்கணுமா? 12,000 லிட்டர் மினரல் வாட்டர் கொடுங்க.. ஷாக் கொடுத்த நடிகை

சென்னை: Nila (நிலா) குளியல் காட்சியில் நடிக்க நடிகை நிலா 12,000 லிட்டர் மினரல் வாட்டர் கேட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.

பாலிவுட் நடிகைகள் ப்ரியங்கா சோப்ரா மற்றும் பரினிதி சோப்ரா ஆகியோரின் உறவினர் மீரா சோப்ரா. இவர் தமிழில் நிலா என்ற பெயரில் திரையுலகில் அறிமுகமானார். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற அன்பே ஆருயிரே படம்தான் நிலாவுக்கு முதல் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Nila asked for 12,000 liters of mineral water to act in the bathing scene

வாய்ப்புகள்: முதல் படத்தின் டீசண்ட்டான வரவேற்புக்குப் பிறகு நிலாவுக்கு தமிழில் வாய்ப்புகள் சில அமைந்தன. அப்படி அவர் ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜகன்மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் மருதமலை படம் மட்டுமே ஓரளவு ஓடியது. அதுவும் வடிவேலுவின் காமெடியால் மருதமலை படம் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது வடிவேலுதான்.

கடைசி படம்: தமிழில் நடித்துக்கொண்டிருந்தபோது தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்தார் நிலா. அதனையடுத்து பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. சூழல் இப்படி இருக்க எஸ்.ஜே.சூர்யா கடைசியாக இயக்கிய படமான இசை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதனையடுத்து தமிழில் கில்லாடி படத்தில் நடித்தார். பிறகு தமிழில் நடிக்கவில்லை.

ஜாம்பவான்: இந்த சூழலில் ஜாம்பவான் படத்தில் நடித்தபோது குளியல் காட்சியில் நடிக்க நிலா 12,000 லிட்டர் மினரல் வாட்டர் கேட்டு பிரச்னை செய்ததாக அந்தப் படத்தின் இயக்குநர் நந்தகுமார் தெரிவித்திருக்கிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில், "ஜாம்பவான் படத்தின் ஒரு காட்சியை குற்றாலத்தில் எடுத்தோம். குற்றாலத்திற்கு கீழே 12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் நிலாவும் அவரது தோழிகளும் குளிப்பது போன்றும்; அப்போது பிரசாந்த் அங்கு வந்ததும் தோழிகள் ஓடிவிட நிலா அந்த தொட்டிக்குள் முங்குவது போன்ற காட்சி அது.

Actress Nila asked for 12,000 liters of mineral water to act in the bathing scene

மினரல் வாட்டர் வேண்டும்: அந்தக் காட்சி எடுக்கப்படும்போது இந்தத் தண்ணியில் நான் குளிக்க மாட்டேன். ஒன்று ஷவரில் குளிப்பேன். அப்படி இங்கு குளிக்க வேண்டுமென்றால் இந்தத் தொட்டியில் மினரல் வாட்டரை ஊற்றுங்கள் என்றார். அதற்கு நானோ, ஏன் மா 12,000 லிட்டர் மினரல் வாட்டர் வேண்டும் என்றால் தயாரிப்பாளர் நிலை என்னவாகும். அவரது முதல் படம் இது என்றேன்.

பொய் குற்றச்சாட்டு: ஆனால் நிலாவோ ஒத்துக்கொள்ளவே இல்லை. ஒருகட்டத்தில் ஷூட்டிங்கிலிருந்து பாதியில் கிளம்பிவிட்டார். படத்தின் தயாரிப்பாளர் நிலா தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று கெஞ்சாத குறையாக கூப்பிட்டார். அப்போதும் ஒத்துக்கொள்ளாத அவர் அங்கிருந்து யாருக்கும் சொல்லாமல் கிளம்பிவிட்டார். அதோடு நில்லாமல் மதுரையில் வைத்து பத்திரிகையாளர்களிடம், ஜாம்பவான் பட தயாரிப்பாளர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் எனவும் பொய் குற்றச்சாட்டையும் வைத்துவிட்டார். பிறகு நான் அதற்கு விளக்கமளித்தேன்.

குற்றாலம் டூ பாங்காக்: அதன் பிறகு தயாரிப்பாளர் தியாகராஜனிடம் இந்த விஷயம் செல்ல அவர் ஜாம்பவான் தயாரிப்பாளரை அழைத்துக்கொண்டு டெல்லி சென்று சமாதானம் பேசினார். இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யாவும் நிலாவிடம் பேசிப்பார்த்தார். தியாகராஜன் பேசியதை அடுத்து நிலா ஒரு கண்டிஷன் வைத்தார். அதாவது நான் இந்தியாவுக்குள் நடிக்கமாட்டேன் பாங்காக்கில் வேண்டுமென்றால் நடிக்கிறேன் என கூறினார். அதையடுத்து பாங்காக்கில் சென்று அந்தக் காட்சியை எடுத்தோம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X