ஐஸ்வர்யா ராய் திருமண வாழ்க்கை குறித்து அபசகுணமாக கமெண்ட் செய்த நடிகை! என்ன சொல்லி இருக்காங்க பாருங்க
மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் இடையில் விவாகரத்து நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றது. ஆனால் இவர்கள் இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை வாய் திறக்காததால் இந்த செய்திகள் இப்போதுவரை கிசுகிசுக்களாகவே உலா வருகின்றது. இந்நிலையில் அபிசேக் பச்சன் தனது திருமண பந்தம் குறித்து பேசும்போது உடன் இருந்த நடிகை நிமரத் கவுர் செய்த கமெண்ட் அதற்கு அபிஷேக் பச்சன் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
கடந்த 1994ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் வெற்றியும் பெற்றார். ஐஸ்வர்யா ராய்க்குப் பின்னர் பல இந்திய மாடல்கள், நடிகைகள் உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளனர். ஆனால் யாரும் ஐஸ்வர்யா ராய் கொண்டாடப்பட்ட அளவிற்கு கொண்டாடப்படவில்லை. இதனாலே ஐஸ்வயார்யா ராய் என்றால் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் நன்கு பழக்கப்பட்ட பெயராக மட்டும் இல்லாமல் முகமாகவும் மாறியது. பல பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு ஐஸ்வர்யா என இதன் காரணத்தினாலே பெயர் வைத்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்தத் திருமணத்தில் இந்தியா முழுவதும் இருந்து பல நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். இவர்கள் இருவருக்கும் ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையில் விவாகரத்து ஏற்படவுள்ளதாக்வும் அதற்கு முக்கிய காரணமே அபிசேக் பச்சன் தான் எனவும் ஹிந்தி ஊடகங்களில் கிசுகிசுக்கள் பறந்த வண்ணம் உள்ளது. இந்த கிசுகிசுக்கள் கடந்த பல மாதங்களாகவே உள்ளது.

இந்த கிசுகிசுக்களை உறுதிப்படுத்தும் விதமாக சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரது திருமணத்தில் கலந்து கொண்டபோது கூட, இருவரும் தனித்தனியே கலந்து கொண்டனர். இருவரும் தனித்தனியே கலந்து கொண்டதும், அந்த நிகழ்ச்சியில் பேசிக்கொள்ளாததும் பெரும் செய்தியாக மாறியது. குறிப்பாக மகள் ஆராத்யா பச்சனுடன் ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ள, அபிஷேக் பச்சன் தனியே கலந்து கொண்டார். இது மட்டும் இல்லாமல், ஐஸ்வர்யா ராய் கையில் அவர்களது திருமண மோதிரம் இல்லை என கூறப்பட்டது.
விவாகரத்து: இந்த விவகாரம் இவர்களுக்கு இடையிலான பிரிவு என்பது கிட்டத்தட்ட உறுதிதான் போல என பார்ப்பவர்களுக்கு தோன்ற வைத்தது. கூட விமான நிலையம், சைமா விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள் என அனைத்திலும் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் கலந்து கொண்டார். இப்படியான நிலையில் தற்போது பம்பாய் ஊடகங்களிலும் இணையத்திலும் பழைய வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகின்றது.

வீடியோ: அதாவது இந்தப் பேட்டி கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றது. தான் நடித்த படத்தின் புரோமோசனுக்காக சக நடிகை நிம்ரத் கவுருடன் இணைந்து அபிஷேக் பச்சன் பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரிடம் அவரது 15 ஆண்டு கால திருமண பந்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் பதில் அளித்துக் கொண்டு இருந்தபோது, நடிகை நிம்ரத் கவுர், " திருமணங்கள் நீண்ட காலம் நீடிக்காது" எனத் தெரிவிக்கின்றார். உடனே அதைக் கேட்ட அபிஷேக் பச்சன், நன்றி எனக் கூறிவிட்டு தொடர்ந்து பேசுகின்றார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகின்றது.

பதில்: மேலும் அந்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, " ஐஸ்வர்யா ராய் சினிமாவில் எனக்கு முன் இருந்து இருக்கின்றார். நான் வீட்டிற்கு வரும்போது என்னுடன் பேசவேண்டுமா? இல்லை என்னை தனியே விடவேண்டுமா என்பது வரை அவருக்கு நன்றாகத்தெரியும். எதிர்மறை விமர்சனங்களை எப்படி கையாளவேண்டும் என அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். ஒரே துறையைச் சேர்ந்த பார்ட்னர் கிடைத்திருப்பது என்பதை நான் பாக்கியமாகக் கருதுகின்றேன்" என பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











