ஈடுசெய்ய முடியாத இழப்பு.. பிரபல நடிகை வீட்டில் நிகழ்ந்த துயரம்.. ஆறுதல் கூறும் பிரபலங்கள்!
சென்னை: பிரபல டிவி சீரியல் நடிகையான நிஷா தனது வீட்டில் நிகழ்ந்த துயர சம்பவத்தை சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
சன் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக கேரியரை தொடங்கியவர் நிஷா. இவர் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் பல சீரியல்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் தடம் பதித்துள்ளார் நிஷா. முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் நடித்துள்ளார்.

நான் சிகப்பு மனிதன்
இவன் வேறமாதிரி, நான் சிகப்பு மனிதன், என்ன சத்தம் இந்த நேரம், சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, வில் அம்பு ஆகிய திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

காதல் திருமணம்
சீரியல் நடிகையான இவர் சினிமா நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை காதல் திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்கில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிஷா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

நிஷா பாட்டி மரணம்
இந்நிலையில் நடிகை நிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள பதிவு ஒன்று ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நிஷா தனது பாட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

என் கமலா பாட்டி..
அதில், என் வாழ்க்கையில் ஈடு செய்ய முடியாத இழப்பு. என் கமலா பாட்டி! அவர் சிறந்த சமையல்காரர், சிறந்த கட்டிப்பிடிப்பவர், சிறந்த வாழ்க்கை ஆசிரியர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த நண்பர், சிறந்த ஸ்பாய்லர் மற்றும் பல.

யாராலும் நிரப்பப்படாது!
எங்கள் இதயங்களில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டீர்கள். அது வேறு யாராலும் நிரப்பப்படாது!
அமைதியாக உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்" இவ்வாறு நிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபலங்கள் இரங்கல்
நிஷாவின் இந்தப் பதிவை பார்த்த சனம் ஷெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் நடிகை பூஜா ராமச்சந்திரன் மற்றும் நடிகர் ஆரவ் ஆகியோரும் நிஷாவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











